உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமையாக இருப்பது அவசியம்: ராகுல்

பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமையாக இருப்பது அவசியம்: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்; பயங்கரவாதததை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறி உள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்து ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ராகுல் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதலும் கூறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=83k494yf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது; என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும்,உதவி செய்யவும் நான் இங்கு வந்துள்ளேன். ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த மக்களும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். அவர்கள் தேசத்துக்கு முழுமையான ஆதரவை அளித்துள்ளனர்.காயம் அடைந்தவர்களில் ஒருவரை நான் சந்தித்தேன். குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிப்பவர்ளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.அரசுடன் பேசி உள்ளோம். ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளது. அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஆதரிக்கிறோம். சமூகத்தை பிளவுப்படுத்தி, சண்டையிட வைப்பதே தாக்குதலின் பின்னணியில் உள்ள எண்ணம். இதை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த எனது சகோதர, சகோதர்களை சிலர் தாக்குவதை பார்ப்பது வருத்தத்தை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருந்து, பயங்கரவாதத்தை முற்றிலும் தோற்கடிப்பது முக்கியம் என நான் நினைக்கிறேன்.முதல்வரையும், துணைநிலை கவர்னரையும் சந்தித்தேன். அவர்கள் என்ன நடந்தது என்பது குறித்து என்னிடம் விளக்கினர். நானும் எனது கட்சியும் அவர்களுக்கு முழு ஆதரவளிப்போம் என்று உறுதி அளித்தேன்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

RAJASEKAR
ஏப் 26, 2025 08:40

பாகிஸ்தான் கூடவா பப்பு.


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 20:18

எப்போதும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான பேச்சு தானே பேசுவீர்கள்..... இப்போது என்ன புதிதாக பதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு நாடகம் ???


மதிவதனன்
ஏப் 26, 2025 00:42

கேவலம் பிரதமர் சென்று இருக்க வேண்டும் அவர் பீஹார் தேர்தல் வேளையில் இருக்கிறர் , இவர் பிரதமர் போல மக்களோடு இருக்கிறார் , விவசாயிகள் டெல்லி வருவதை தடுக்க அரசு செய்ததை 5% கூட்ஸ் நாட்டின் பாதுகாப்பில் செய்து இருந்தால் இந்த தீவிரவாத தாக்குதலை தடுத்திருக்கலாம்


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 20:15

உங்களை வைத்து கொண்டு தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது..... கட்டு சோற்றுக்குள் பெருச்சாளியை கட்டிய கதை தான்.


Karthik
ஏப் 25, 2025 19:19

அதுக்கு, நீங்க முதல்ல இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம் பப்பு.


Padmasridharan
ஏப் 25, 2025 19:04

பல மதங்கள் இருந்தும் ஒரே நாடு.. பாரதம். பல மொழிகள் இருந்தும் ஒரே நாடு. . இந்தியா. ஒரே மதக்கொள்கையும் ஒரு மொழிக்கொள்கையையும் மற்ற மாநிலங்களுக்கு திணிக்க வேண்டாம். Unity in Diversity என்பதை மனதில் எல்லோரும் உறுதி கொள்ளவேண்டும்


V Venkatachalam
ஏப் 25, 2025 19:00

பப்புக்கு இப்போ தான் புரிஞ்சிருக்கு போல. எதை எவன் கையில் எடுக்கிறானோ அதனால் அவனுக்கு அழிவுன்னு. அப்புறம் சுப்ரீம் கோர்ட் வேற இன்னிக்கி சரியான சூடு போட்டு இருக்கு.எதிர் வரும் காலத்திலும் சுதந்திரம் வாங்கித் தந்தவர்களை இழிவாக பேசக்கூடாதுன்னு,இன்னொரு சூடும் போட்டிருக்கு. அதனால் இந்த நல்லவன் வேஷம் போடுது பப்பு. பொது மக்கள் உஷாராக இருக்கணும்.


MARUTHU PANDIAR
ஏப் 25, 2025 18:38

இதெல்லாம் ஒரு பேச்சு. ஒங்க வீட்டு மாப்ள என்ன சொல்றார் தெரியுமா? அந்த அமைதி சிறுபான்மைக்கு பயமாம் பயம். எதிர்காலத்தைப் பத்தி. அதுக்கு மோடி காரணமாம். அதுனால அவருக்கு நம்பிக்கை வர்ற மாதிரி நடந்துக்கணுமாம். அப்படி நடந்துக்காததனால் இப்படி தான் கொலைகள் நடக்குமாம். அவருக்கு கேரளாவிலிருந்து ஒரு ராஜ்ய சபா சீட்டு ரெடி பண்னு அப்படீங்கறாங்க .


மீனவ நண்பன்
ஏப் 25, 2025 18:30

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் இப்படி சொல்கிறாரோ ?


RAMAKRISHNAN NATESAN
ஏப் 25, 2025 20:13

இண்டி கூட்டணியில் அப்துல்லா இல்லை என்பதை ஏற்கனவே அப்துல்லா தெளிவு படுத்திவிட்டார் ....


krishna
ஏப் 25, 2025 18:20

DESA VIRODHA MAINO CONGRESS MAFIA KUMBAL MIRUGA MOORGANIN VOTTU PICHAIKKAGA NAATAI ADAGU VAITHU PADHAVIYIL IRUNDHA KEVALA JENMANGAL IPPODHU IPPADI PECHU.I.N.D.I KOOTANI KUMBAL ELLORUM MIRUGA MOORGA KOOTATHUKKU KOTHADIMAIGAL VOTTU PICHAIKKAGA. ADHIL MAMATHA BEGUM NO 1.THURU PIDITHA IRUMBU KARAM NO 2.


Kasimani Baskaran
ஏப் 25, 2025 18:19

இவர் வெளிநாடு போகும் பொழுதெல்லாம் இந்தியாவுக்கு சிக்கல். பல காங்கிரஸ் கப்பிகள் பாகிஸ்தானில் இருந்ததாக தகவல் வருகிறது. அரசின் அனுமதி பெறாமலேயே சென்று இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் பாராளுமன்றத்துக்குள் விடுவதே தவறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை