உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டில் ராகுலின் ‛டர்பன் பேச்சால் பூமராங்!

வெளிநாட்டில் ராகுலின் ‛டர்பன் பேச்சால் பூமராங்!

புதுடில்லி : அமெரிக்காவில் சீக்கியர்கள் குறித்து காங்., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் ஆதரவு தெரிவித்துள்ளது, நம் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் உள்ள அவரது தாய் சோனியா வீட்டெதிரே, சீக்கிய அமைப்பினர் சிலரும், பா.ஜ.,வின் சீக்கிய பிரிவினரும் போராட்டம் நடத்தினர். பல முனைகளில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், காங்., தலைவர்கள் 'கப்சிப்' ஆகியுள்ளனர்.அமெரிக்காவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சென்றுள்ளார். சமீபத்தில், ஜார்ஜ் டவுன் பல்கலையில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qt4agfkj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது ராகுல் பேசியதாவது:இந்தியாவில் சீக்கியர்கள் இனி தலைப்பாகை அணிய முடியுமா, 'கடா' எனப்படும் கைகளில் காப்பு வளையம் அணிய முடியுமா, குருத்வாராவுக்கு செல்ல முடியுமா என்பதற்கான சண்டை நடக்கிறது. இது, அனைத்து மதங்களிலும் நடக்கிறது.

கொந்தளிப்பு

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, சில மதங்கள், மொழிகள், சமூகங்களை, மற்றவர்களை விட தாழ்வாகப் பார்க்கிறது. இந்தியாவில் இதற்குத் தான் சண்டை நடக்கிறது; அரசியலுக்காக அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.ராகுலின் இந்த பேச்சுக்கு, பா.ஜ.,வினர் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுலின் கருத்துக்கு, அமெரிக்காவில் இருந்து இயங்கும், காலிஸ்தான் ஆதரவு இயக்கமான, 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற அமைப்பின் தலைவரும், பயங்கரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னுான் ஆதரவு தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில் சீக்கியர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து ராகுல் தைரியமாக பேசியுள்ளார். 1947 முதல் சீக்கியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அவர் குறிப்பிட்டுள்ளார். இது, பஞ்சாபை காலிஸ்தான் நாடாக நிறுவுவதற்கான, எங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது' என குறிப்பிடப்பட்டிருந்தது.இவ்விவகாரம் நம் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியின் ஜன்பத் பகுதியில் உள்ள ராகுல் மற்றும் அவரது தாயும், பார்லி., - காங்., குழு தலைவருமான சோனியா வீட்டெதிரே, சீக்கிய அமைப்பினரும், பா.ஜ.,வின் சீக்கிய பிரிவினரும் நேற்று ராகுலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். டில்லியின் விக்யான் பவனில் இருந்து, ஜன்பத் பகுதியில் உள்ள ராகுலின் வீட்டை நோக்கி, பா.ஜ.,வின் சீக்கிய அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். 'சீக்கியர்களை அவமானப்படுத்தியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அவர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.போராட்டத்தில் பங்கேற்ற சீக்கியர்கள் கூறுகையில், 'கடந்த 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்துக்கு, காங்., பொறுப்பேற்க வேண்டும். தற்போது எங்களை அவமானப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவில் ராகுல் பேசியுள்ளார். இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றனர்.

வாடிக்கை

ராகுலுக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துகளை வெளியிடுவதும் ராகுலுக்கும், காங்கிரசுக்கும் வாடிக்கையாகி விட்டது. ஜம்மு - காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியை ஆதரிப்பது, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசுவது என, எப்போதும் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் ராகுல் செயல்படுகிறார். மதம், மொழி அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்., அரசியலை, ராகுலின் பேச்சு அம்பலப்படுத்தி உள்ளது. இட ஒதுக்கீட்டுக்குஎதிரான காங்., நிலைப்பாட்டை, மீண்டும் ஒருமுறை அவர் வெளிப்படுத்தி உள்ளார். பா.ஜ., இருக்கும் வரை, யாராலும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, தேசத்தின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறுகையில், ''நம் நாட்டையும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களையும் அவமதிப்பது, ராகுலுக்கு வழக்கமாகி விட்டது. அவர், பொய் பிரசாரத்தின் தலைவர்,'' என்றார்.வெளி நாட்டு பயணங்களின் போது, நம் நாடு குறித்து ராகுல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதன்முறையல்ல. பிரிட்டன், அமெரிக்கா என எந்த நாட்டுக்கு போனாலும், நம் நாடு, நம் நாட்டின் ஜனநாயகம் குறித்து, வாய்க்கு வந்தபடி பேசுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். இந்த முறை பல முனைகளில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதால், என்ன செய்வது என தெரியாமல், காங்., தலைவர்கள், 'கப்சிப்' ஆகியுள்ளனர்.

ஏன் இவ்வளவு பொய்?

நாட்டின் கலாசாரத்தை பாதுகாப்பதில் சீக்கியர்களின் பங்களிப்பை ஒட்டுமொத்த நாடும் போற்றுகிறது. இந்தியா - சீனா பிரச்னை, இட ஒதுக்கீடு உட்பட அனைத்து விவகாரங்களிலும், உண்மைக்கு புறம்பான தகவல்களை ராகுல் தெரிவித்துள்ளார். அவர் ஏன் இவ்வளவு பொய் சொல்கிறார்?ராஜ்நாத் சிங்ராணுவ அமைச்சர், பா.ஜ.,

'பிரிவினைவாதிகளை அரவணைப்பது காங்கிரசுக்கு புதிதல்ல!'

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தன் முன்னோர் செய்த குற்றங்களுக்கு வெள்ளை அடிக்க துடிக்கிறார். அவர், 'சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவரா என்பது தான் இந்தியாவில் நடக்கும் போராட்டம்' போன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். பிரிவினைவாதிகளை அரவணைப்பது காங்கிரசுக்கு புதிதல்ல. எனவே, ராகுலின் செயல் யாரையும் ஆச்சரியப்பட வைக்கவில்லை.இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ராகுல் மிகவும் ஆட்சேபனைக்கு உரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ், 'இட ஒதுக்கீடு என்ற பெயரில் முட்டாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க கூடாது' என்றார். ராகுல், தன் தாத்தா, பாட்டி, தந்தை அடிச்சுவடுகளை பின்பற்றி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியுள்ளார். அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்.

காங்., நாடகமாடுகிறது!

இட ஒதுக்கீடு விவகாரத்தில், ராகுல் தவறான தகவல்களை தெரிவிக்கிறார். மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினருக்கு காங்., எதுவுமே செய்யவில்லை. தற்போது அக்கறை இருப்பது போல் அக்கட்சியினர் நாடகமாடுகின்றனர்.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்

மோடி சரியாக கையாளவில்லை'

வாஷிங்டனில் புகழ்பெற்ற தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில், செய்தியாளர்களிடம் நேற்று ராகுல் பேசியதாவது:இந்திய எல்லைக்குட்பட்ட லடாக்கில், 4,000 சதுர கி.மீ., பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. லடாக்கில் டில்லியின் அளவு நிலத்தை சீனப் படைகள் ஆக்கிரமித்துள்ளன. இது ஒரு பேரழிவு. இதைப் பற்றி எந்த ஊடகங்களும் பேச விரும்பவில்லை.உங்கள் நாட்டில், 4,000 சதுர கி.மீ., பரப்பை அண்டை நாடு ஆக்கிரமித்தால், உங்கள் அரசு என்ன செய்யும்? எந்த நாட்டின் தலைவராவது இதை சரியாக தான் செய்தோம் என சொல்லி தப்பிக்க முடியுமா? இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்த விவகாரத்தை, பிரதமர் மோடி சரியாக கையாளவில்லை.இந்தியாவில் பயங்கரவாத செயல்களை பாக்., ஊக்குவிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம். அந்நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை, பேச்சுக்கு வாய்ப்பே இல்லை. வங்கதேசத்தில் நிலைமை சரியாகி விடும் என நாங்கள் நம்புகிறோம். இந்திய - -அமெரிக்க உறவு என்பது இரு நாடுகளுக்கும் முக்கியமானது. அதே சமயம், இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை. எங்களது பிரச்னையை நாங்களே பார்த்துக் கொள்வோம். இந்திய ஜனநாயகம் பாதுகாப்பாக இருப்பதை நாங்களே உறுதி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

'ஆபத்தான செயல்களில்

ராகுல் ஈடுபடுகிறார்'டில்லியில், பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வரும், அமெரிக்க எம்.பி., இலன் ஓமரை, ராகுல் சந்தித்துள்ளார். நம் நாட்டுக்கு எதிரானவர்களை சந்திப்பதையே அவர் வழக்கமாக வைத்துள்ளார். இந்த முறை, ராகுலுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் ஆதரவு தெரிவித்துள்ளார். தன் இந்திய விரோத நண்பர்கள் பட்டியலில் மேலும் ஒரு புதிய நண்பரை அவர் சேர்த்துள்ளார். முன்பு, குழந்தைத்தனமான செயல்களில் ராகுல் ஈடுபட்டார்; தற்போது ஆபத்தான செயல்களில் அவர் ஈடுபடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

'சம்மன் அனுப்பி

விசாரியுங்கள்!'உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, காங்., ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா நேற்று கூறியதாவது:நாங்கள் அரசியலமைப்பை நிலைநிறுத்துவது பற்றியே பேசி வருகிறோம். இது தேச விரோதமா? அரசியலமைப்பு பற்றி பேசும்போதெல்லாம், பா.ஜ., ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது? வெளி நாட்டு பயணங்களின் போது, இந்தியா குறித்தும், இந்தியர்கள் குறித்தும் பிரதமர் மோடி பல முறை ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இது தேச விரோதம் இல்லையா? முதலில் மோடி மீது நடவடிக்கை எடுங்கள். அமெரிக்காவில், ஜனநாயக கட்சியின் எம்.பி., இல்ஹான் ஒமரை, ராகுல் சந்தித்தாரா அல்லது இல்லையா என்பது குறித்து அறிய பா.ஜ.,வினர் ஆவலாக உள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் தான் இருக்கின்றனர். இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க துாதருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Ganesh
செப் 12, 2024 22:14

இது பிஜேபி யோட vella


Muralikrishnan Ramanunni
செப் 12, 2024 21:54

Idiot always idiot


M Ramachandran
செப் 12, 2024 20:02

புத்தி பேதலித்தவனாய் நாட்டு மக்களின் த்ரோகியை தேர்ந்தேடுத்த மக்கள் தலை குனிய வேண்டும்


Duruvesan
செப் 12, 2024 20:01

தொப்புள் கொடி உறவை கோத்தாக கொன்று குவித்த ராஜ பக்சேவுக்கு துணை நின்ற காங்கிரஸ் மற்றும் தீயமுக என்ன செய்தாலும் தமிழ் அடிமைகள் 40 சீட்டும், 234 சீட்டும் அள்ளி குடுக்கும்


Anu Sekhar
செப் 12, 2024 19:16

இலான் உமர் ஒரு பிரிவினய் வாதி. நங்கள் இங்கே இவரை மதிப்பதே இல்லை. இவருடன் கூட்டு சேர்ந்து " Squad " உறுப்பினர்கள் இரண்டு பேரை விலக்கி விட்டோம். அமெரிக்கர்கள் இவர்கள் மேல் கடுப்பில் இருக்கிறார்கள். ராகுல் இவர்களோடு தொடர்பு வைத்தது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்.


krishna
செப் 12, 2024 16:11

55 VAYASULA MATURITY VANDHA ENNA VARAATI ENNA INDHA DESAVIRODHA CHINA PAK KAICOOLIE KUMBALUKKU.


krishna
செப் 12, 2024 16:11

INDHA ELECTION MUDINDHU 99 MP SEAT DESA VIRODHA MOORGAN MADHA MAATTRUM ANGI KOOTAM DHAYAVILVAANGIYA UDAN EDHO AATCHIYAI PIDITHADHU POLA CONGRESS KOTHADIMAIGAL PAPPU MATURITY VANDHU VITTADHU ENA KONDAADINAR.55 VAYASULA MATURITY VANDHA ENNA VARAATI ENNA INDHA DESAVIRODHA MAFIA MAINO CHINA PAK KAICOOLIE KUMBALUKKU.


Ramesh.M
செப் 12, 2024 14:43

எத எங்க பேசணும் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லை. இதுல இவரு பிரதம வேட்பாளராம். கடவுளே. இதுக்கு கொஞ்சமாவது புத்தி இருந்தால் மந்த புத்தி என்றாவது கூப்பிடலாம். அதுக்கும் வழியில்லை. ஹிஹிஹி..


Kogulan
செப் 12, 2024 16:38

உண்மை


Nagarajan D
செப் 12, 2024 13:36

இந்த பயபுள்ள எல்லா சீக்கியர்களை மன்மோகன் சிங் என்று நினைத்துவிட்டார் போல... . இவரை பாரதத்திலிருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தினால் தான் அடங்குவார்


Sck
செப் 12, 2024 12:31

ஏனோ தெரில, ராகுலை பார்த்தாலே ஒரு மக்கு பிளாஸ்திரி போன்ற லுக் தெரிகிறது எனக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை