உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் பலன் தராத ராகுலின் யாத்திரை

பீஹாரில் பலன் தராத ராகுலின் யாத்திரை

புதுடில்லி: பீஹாரில் ராகுல் பேரணி நடத்திய இடங்களில் அமைந்துள்ள தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜ ஓட்டுகளை திருடுவதாக கூறி காங்கிரஸ் எம்பி ராகுல் பீஹாரில் யாத்திரை ஒன்றை நடத்தினார்.ஆக.,17 ல் துவங்கிய சசாராம் பகுதியில் துவங்கிய இந்த யாத்திரை 25 மாவட்டங்களில் உள்ள 110 சட்டசபை தொகுதிகளை கடந்து பாட்னாவில் செப்.,1 ல் நிறைவு பெற்றது. சுமார் ,1300 கி.மீ., தூரம் இந்த யாத்திரை நடந்தது.ஆனால், இந்த யாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், 6 ல்( வால்மிக நகர், சன்பாடியா, அராரியா, கிஷன்கஞ்ச் மற்றும் மணிஹரி) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும், ராகுல் யாத்திரை சென்ற பகுதிகளில் இல்லை. இதனால்,ராகுல் யாத்திரை சென்ற அனைத்து பகுதிகளிலும் காங்கிரஸ் பின் தங்கியுள்ளது.கடந்த 2022 முதல் 2024 வரை ராகுல் நடத்திய பாரத்ஜோடோ யாத்திரையால் லோக்சபா தேர்தலில், கடந்த தேர்தலை விட இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைத்தது. தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடித்தது. அதேபோல் பீஹாரிலும் பலன் அடையலாம் என காங்கிரசார் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள், ராகுலால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதை காட்டுகிறது. பாஜ மற்றும் தேர்தல் கமிஷன் மீது ஓட்டுத் திருட்டு என்ற குற்றச்சாட்டை ராகுல் தொடர்ந்து கூறிவந்தாலும் அதனை பீஹார் வாக்காளர்கள் கண்டுகொள்ளவில்லை. காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்னபீஹாரில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் ஆராய வேண்டியிருந்தாலும், ஆரம்பம் முதல் மஹாகத்பந்தன் கூட்டணியில் ஒற்றுமையில்லாதது, தொகுதிகளில் எதிரொலித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயக்கம் காட்டி வந்தது. ராகுலின் யாத்திரை, தொண்டர்கள் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், தேர்தல் பிரசாரம் முடியும் போது அது மாயமாகிவிட்டது. உற்சாகம் , மகிழ்ச்சி ஆகியவை போனதால், தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சிகள் இடையே நட்பு ரீதியிலான போட்டி மற்றும் மோதல் காரணமாக ஏற்பட்ட குழப்பம், காங்கிரசை மட்டும் அல்லாமல் ஆர்ஜேடியையும் பாதித்தது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M S RAGHUNATHAN
நவ 22, 2025 13:25

முதலில் ராகுலுக்கு ஓட்டுநர் உரிமம் DRIVING LICENSE இருக்கா ?


Kalyanaraman
நவ 15, 2025 08:24

ராகுலால் காங்கிரசுக்கு பைசாக்கு பிரயோஜனம் இல்லை என்கிற போது ராகுல் நடத்திய யாத்திரை மட்டும் எப்படி காங்கிரஸுக்கு உபயோகமாக இருந்திருக்க முடியும்.¿¿?? ......போதையில் வாழ்க்கை.


தமிழ் வேல்
நவ 15, 2025 08:23

மீன் பிடி, நீச்சல் ஆடிப்பு, ஓட்டு கொள்ளையன் ஓட்டு திருட்டுப் பற்றி லெக்சர் குடுத்தது வெளிநாட்டில் தன் தாய் நாட்டை பற்றி அவதூறாக பேசியது இதெல்லாம் ஓட்டு மொத்தமா அறுவடை செய்தாயிட்டு. இனிமேலாவது கொஞ்சம் சூதானமாக இருக்க கற்றுக் கொள்


R.MURALIKRISHNAN
நவ 14, 2025 21:58

அப்புறம், பீகாரில் காங்கிரசை முடிச்சுட்டு கிளம்பிட்டாப்புல இருக்கு படம்


நிக்கோல்தாம்சன்
நவ 14, 2025 22:22

பிகாரில் காங்கிரசை முடித்து விட்டது தமிழகத்தின் முடிசூடா மன்னர்


Velan Iyengaar, Sydney
நவ 14, 2025 21:54

தலைப்பு தவறு. என் டீ ஏ வுக்கு பலன்


நிக்கோல்தாம்சன்
நவ 14, 2025 21:51

பீகாரிகள் கூட நேபோட்டிசம் வேண்டாம் என்று தூக்கி எரிந்து விட்டனர் , தமிழர்கள் ?


Srinivasan Narasimhan
நவ 14, 2025 21:45

ஓவ்வொரு தேர்தல் முடிந்தும் பாடம் படிப்பதில்லை.


சசிக்குமார் திருப்பூர்
நவ 14, 2025 21:37

எவர் எதை சொன்னாலும் ராகுல் நீங்கள் தான் பிஜேபியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம்


ஆரூர் ரங்
நவ 14, 2025 21:21

ஆனா ஸ்டாலினின் பிரச்சாரம் சக்சஸ். அதனால் முசாபர்நகர் காங்கிரசு வேட்பாளர் டெபாஸிட் காலியாகும் நிலை. என்னயிருந்தாலும் திமுக கயவர்கள் பிகார் உழைப்பாளிகள் பற்றி பே‌சிய கிண்டல் பேச்சுக்கள் அம்மாநில மக்களின் தன்மான உணர்வை சீண்டி விட்டது புள்ளிக் கூட்டணிக்கு பெரிய வேட்டு வைத்துவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை