உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முடா அலுவலகத்தில் ரெய்டு

முடா அலுவலகத்தில் ரெய்டு

மைசூரு: 'முடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், முதல்வர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.இதன்படி, முதல்வர், அவரது மனைவி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, நிலத்தை விற்ற தேவராஜு ஆகியோர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அமலாக்க துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.இந்நிலையில், மைசூரில் உள்ள 'முடா' அலுவலகம், தாலுகா அலுவலகம், கெங்கேரியில் உள்ள தேவராஜு வீடு ஆகிய மூன்று இடங்களில் நேற்று காலை, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர்.முடா அலுவலகத்தில், 20 அதிகாரிகள் குழு உள்ளே நுழைந்து, அலுவலகத்தின் கேட்டை பூட்டியது. சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீசார் 12 பேர், துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

VENKATASUBRAMANIAN
அக் 19, 2024 08:15

நேர்மையானவர் என்றால் உடனே ராஜினாமா செய்திருக்கவேண்டும். மனைவி ஒப்புக்கொண்ட பிறகு தெளிவாக இவர்களது தில்லுமுல்லு வெளியே வந்துள்ளது


Kasimani Baskaran
அக் 19, 2024 07:49

சாமர்த்தியமாக தவறு செய்ய திராவிடர்களிடம் முழு அளவிலான பயிற்சி எடுத்து இருக்க வேண்டும் - ஆனால் திராவிட எதிர்ப்பு காரணமாக அந்த வித்தை மட்டுமல்லாது அது தொடர்பான தொழில்நுணுக்கம் கூட சரியாக கற்கவில்லை. அதனால்தான் இப்படி கார்கே, சீதாராமைய்யா போன்ற பெரும் முதலைகள் கூட சிக்கிவிட்டன.


நிக்கோல்தாம்சன்
அக் 19, 2024 03:57

நீங்க என்ன செய்தாலும் இனி அவ்ளோதான் , சித்து கருநாடக கருணா என்பதனை நினைவில் கொள்ளுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை