உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீயா... நானா...: வந்தே பாரத் ரயிலை இயக்க போட்டிப்போட்ட ரயில்வே ஊழியர்கள்

நீயா... நானா...: வந்தே பாரத் ரயிலை இயக்க போட்டிப்போட்ட ரயில்வே ஊழியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோடா: வந்தே பாரத் ரயிலை யார் இயக்குவது என கோடா மற்றும் ஆக்ரா கோட்ட ரயில் டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உ.பி., மாநிலம் ஆக்ரா முதல் ராஜஸ்தானின் உதய்ப்பூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை இயக்குவதில் இரண்டு கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை (செப்.,02) இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வியாழன் அன்று கோடா நகரில் மீண்டும் இரு கோட்டங்களில் பணிபுரியும் ரயில் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் மோதிக் கொண்டனர். இதில் சிலரின் உடைகள் கிழிக்கப்பட்டன.இந்த பிரச்னை, ரயில்வே வாரியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களாலும் தீர்வு காண முடியவில்லை. மோதல் காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த மோதலை நேரில் பார்த்த சிலர் கூறுகையில், வந்தே பாரத் ரயிலில் ஆக்ரா கோட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் பணியில் இருந்தனர். அங்கு வந்த எதிர்தரப்பினர் அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். உடனடியாக ரயிலில் இருந்த டிரைவர் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தார். டிரைவரை வெளியே வர கோஷமிட்டனர். ஆனால் அவர் வெளியே வராததால், வெளியே இருந்தவர்கள் ரயில் கதவு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இரு கோட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

E Anban
செப் 08, 2024 10:39

மோதல் தன்மை பிழையானது. ரயில் நிர்வாகம் சரியான புரிதல் சட்டத்தை வழிமுறைகளை உருவாக்கி தொழிற்சங்கங்களுடன் பேசி ரயிலை இயக்க திட்டமிட்டு கோட்ட களிடயே பகிர செய்வார்கள். இரண்டு கோட்ட மேலாளர்கள் தவறாக இருக்கும்.- ஓய்வு பெற்ற ஓட்டுநர்


Pandi Muni
செப் 07, 2024 20:35

உண்டியல் ஏந்தி கம்யூனிஸ்ட்டாகவும் இருக்கலாம். காங்கிரசும் கம்யூனிஸ்டும் தேச துரோகிகளே


சாண்டில்யன்
செப் 07, 2024 17:34

இது போன்ற விஷயங்கள் வீதிக்கு வந்து சந்தி சிரிக்காமல் பார்த்துக் கொள்வது பொறுப்பிலுள்ள உயர் அதிகாரிகளின் திட்டமிடல் இல்லாததுதான் காரணம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அறிமுகப் படுத்துமுன் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் காலஞ்சென்ற திரு நமசிவாயம் அவர்கள் ரயில்வே வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த ரயிலுக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டுள்ள போது தமிழ்நாட்டிலுள்ள சதர்ன் ரயில்வே ஊழியர்கள்தான் இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்து அதை வெற்றிகரமாக பெற்று தந்தார் GT எக்ஸ்பிரஸ் வடக்கு ரயில்வே


visu
செப் 07, 2024 20:21

அனைவரும் நிரந்தர ஊழியர்களே யார் இயக்கினால் என்ன இதில் எதற்கு போட்டி பொறாமை


RAMAKRISHNAN NATESAN
செப் 07, 2024 15:22

இயக்குவதற்கு போட்டியா ???? வந்தே பாரத் வண்டியில் ட்ரைவர் மற்றும் கார்டு ஆகிய இருவருக்கும் நல்ல வசதியான இருக்கை - வாஷ் ரூம் வசதியுடன் - குளுகுளு இன்ஜின் அறை ..... இதுதானே காரணம் ????


Kumar Kumzi
செப் 07, 2024 15:15

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் இந்த மாதிரி ரவுடிகளை சிறையில் அடைக்க வேண்டும் இதன் பின்னணியில் சேசத்துரோகி ராகுல் இருப்பார்.


ஆரூர் ரங்
செப் 07, 2024 14:43

கோட்டாவில் கோட்டாவாலேயே...


murali
செப் 07, 2024 14:29

இரு மாதங்களுக்கு முன்பு ராகுல் ரயில்வே டிரைவர் சங்கத்தினரை சந்தித்து பேசியது நினைவு கொள்ள பட வேண்டும்


Jai Sankar Natarajan
செப் 07, 2024 14:08

ரயில்வே ஊழியர்களை ராகுல் சந்தித்த பிறகு, அவர்கள் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டனர், இது தொடரவும் வாய்ப்பு உள்ளது.


Prabhakaran M
செப் 08, 2024 13:44

உண்மைதான். மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை