உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயிலில் ஓசி பயணம்! போலீசார் 400 பேருக்கு அபராதம் விதித்தது ரயில்வே

ரயிலில் ஓசி பயணம்! போலீசார் 400 பேருக்கு அபராதம் விதித்தது ரயில்வே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசியாபாத்: ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்த போலீசார் 400 பேருக்கு ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்தனார். உ.பி., மாநிலம் காசியாபாத்தில் இருந்து வெளியூர் செல்லும் ஏராளமான ரயில்களில் தினமும் போலீசார் பயணித்து வருகின்றனர். அவ்வாறு செல்லும் போலீசார் டிக்கெட்டுகளை எடுக்காமல் குளிர்சாதன வகுப்பு, முன்பதிவு செய்த படுக்கைகளில் ஏறிக் கொண்டு பயணிகளை தொந்தரவு செய்வதாக ஏராளமான புகார்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு வந்தன.ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் மட்டுமல்லாது, பாண்ட்ரி எனப்படும் சமையல் அறைகளிலும் அவர்கள் பயணிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர் புகார்களை அடுத்து, ரயில்வே நிர்வாகம் அதிரடியான நடவடிக்கைகளுக்கு தயாரானது.குறிப்பாக பிரக்யாராஜ் ரயில் நிலையத்தில் இத்தகைய புகார்கள் அதிகம் குவிந்தததால் அங்கு அதிரடி ஆக்சன் நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ச்சியாக காசியாபாத் மற்றும் கான்பூர் இடையே செல்லும் ரயில்கள் அதிரடி சோதனையில் இறங்கினர்.ஒரு மாதமாக இடைவிடாது நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் போலீசார் 400 பேர் சிக்கினர். டிக்கெட் இன்றி பயணித்தது, முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்தது உள்ளிட்ட வகைகளில் அவர்களுக்கு ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளதாவது; ரயில்களில் டிக்கெட் இல்லாமல் செல்வது, முன்பதிவு பயணிகளுக்கு மட்டும் இடைஞ்சல் இல்லை. ரயில்வேக்கும் பெரும் இழப்பு. அதனால் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். இத்தகைய நடவடிக்கைகள் தொடரும்.சோதனை நடப்பதை அறிந்த பலர் ரயில்களில் இருந்து அவசர, அவசரமாக மற்ற பெட்டிகளை வேகமாக கடந்து சென்றுவிட்டனர். இனி தீபாவளி பண்டிகை வர உள்ளதால் எங்களின் சோதனை கடுமையாக இருக்கும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Kumar
அக் 20, 2024 07:12

Police atrocities against the public are daily happening


Raja Vardhini
அக் 19, 2024 18:22

இதேபோல் போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமோ ரயிலில் பெரும்பாலானோர் டிக்கெட் எடுப்பதேயில்லை. செக்கிங் இன்ஸ்பெக்டர் என்று யாரும் வருவதுமில்லை.....


Nagarajan S
அக் 19, 2024 18:18

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சோதனையை ரயில்வே நடத்தவேண்டும்.


Narayanan Sa
அக் 19, 2024 13:44

இரண்டு மடங்கு அபராதம் இவர்களுக்கு விதிக்க வேண்டும். ஏன் என்றால் இவர்கள் தினமும் லஞ்சம் வாங்குகிறார்கள் அல்லவா


Raghavan AK
அக் 19, 2024 12:27

டிபார்ட்மெண்ட் ஆக்ஷனும் எடுக்கப் பட வேண்டும்.


l.ramachandran
அக் 19, 2024 12:18

pantry என்ன லோகோ என்ஜினிலும் பயணிக்கின்றனர். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சோதனை அவசியம்.


Jayaraman
அக் 19, 2024 12:10

Only 400 persons caught in month? It is too less. At least 200 people can be caught in one north train per trip.


Ramesh Sargam
அக் 19, 2024 12:09

ரயிலில் ஓசி பயணம் செய்ததற்கு அபராதம் விதித்தீர்கள். நல்லது. ஆனால் தினம் தினம் சிறுகுறு வியாபாரிகளை மிரட்டி ஓசியில் பொருட்களை வாங்கும் போலீசார், ஓசியில் டீ , காபி குடிக்கும் போலீஸ்காரர்களை கூட பிடித்து அபராதம் விதிக்கவேண்டும். ஏன் செய்வதில்லை?


Subramanian Marappan
அக் 19, 2024 11:23

ஓசி பயணம் தமிழ்நாட்டிலும் அதிக அளவில் உள்ளது.தினமும் பயணம் செய்யும் போலிஸார் திருப்பத்தூர் கோயம்புத்தூர் இடையே பார்க்க முடியும்.இதுதான் டிரிப்பிளின்ட் போர்ஸ் உடைய லட்சணம்.


ஆரூர் ரங்
அக் 19, 2024 11:22

இதெல்லாம் சகஜமப்பா. அவர்களில் யாராவது எதிர்காலத்தில் முதல்வராகக் கூடியவர் கூட இருக்கலாம்.


புதிய வீடியோ