உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிஸ் பண்ணிடாதீங்க; அற்புதமான வாய்ப்பு: ரயில்வேயில் 11,558 காலிப்பணியிடம் அறிவிப்பு

மிஸ் பண்ணிடாதீங்க; அற்புதமான வாய்ப்பு: ரயில்வேயில் 11,558 காலிப்பணியிடம் அறிவிப்பு

புதுடில்லி: ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.ரயில்வே துறையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவின் கீழ் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது தொழில்நுட்பம் சாராத, முதுநிலை அலுவலர் பிரிவில் (graduate-level posts) 8,113 பணியிடங்கள், இளநிலை அலுவலர் பிரிவில் (undergraduate-level posts) 3,445 பணியிடங்கள் என மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

டிகிரி முடித்தவர்களுக்கு காலியிடங்கள்

* டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736,* ஸ்டேஷன் மாஸ்டர் - 994,* சரக்கு ரயில் மேலாளர் - 3,144,* ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட் - 1,507,* சீனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர்- 732

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு காலியிடங்கள்!

* கமர்ஷியல் கம் டிக்கெட் கிளார்க்- 2,022,* கணக்கு எழுத்தர் மற்றும் டைப்பிஸ்ட்- 361,* ஜூனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட்- 990,* ரயில் கிளார்க்- 72,

கல்வி தகுதிகள் என்ன?

* வணிக தலைமை - டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். * சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு திறன் அவசியம்.

வயது வரம்பு

* டிகிரி முடித்தவர்களுக்கு காலியிடங்களுக்கு 18 முதல் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.* இளநிலை அலுவலர் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

* முதுநிலை அலுவலர் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 14 தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.* இளநிலை அலுவலர் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 20.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

* விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு கட்டணம் ரூ.250.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

joji exports
செப் 09, 2024 13:32

அருமை, இந்த மாதிரி அடிக்கடி போடுங்க ஏதாச்சும் நாலு பேருக்கு உபயோகமா இருக்கும்.


ஆரூர் ரங்
செப் 09, 2024 12:14

கல்வியில் மிகவும் முன்னேறிய மாநிலம் தமிழகம். இங்கு இது போன்ற சாதாரண வேலைகளில் சேர விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள். எங்களுக்குத் தேவை பி டெக் டிகிரி( மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி). அதன் பின் டெலிவரி பாய் வேலை. மாலை ஆனதும் சரக்கு பிளஸ் சைடு டிஷ்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 09, 2024 12:13

இரயில்வே துறையில் பணிபுரிய கட்டாயம் இந்தி மொழி அவசியம். நமக்கு தான் இந்தி தெரியாது போடவாச்சே.


Velan Iyengaar
செப் 09, 2024 11:06

மொத்தம் ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் இருந்து ... பிஹாரில் இருந்து....... ஹரியானாவில் இருந்து ....ராஜஸ்தானில் இருந்து ஆட்களை நிரப்பி இருப்பார்கள் ... எதுக்கு தண்டத்துக்கு விண்ணப்ப கட்டணம் செலவு எய்யவேண்டும் ???


ஆரூர் ரங்
செப் 09, 2024 12:19

பாட்னா நகரத்தில் மட்டும் குறைந்தது 2 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு போட்டித்தேர்வு நுழைவுத்தேர்வு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்..வார இறுதி நாட்களில் சாலகளை அடைத்துக் கொண்டு பயிற்சி வகுப்பு. தினமும் 15 மணிநேரம் படிக்கிறார்கள்.நோ சமச்சீர்.உழைத்து முன்னேறத் துடிக்கும் அவர்களுக்கும் நமக்கும் பெரிய வேறுபாடு


Velan Iyengaar
செப் 09, 2024 14:38

காபி அடிப்பதை தேர்வு மய்யங்களே ஊக்குவிப்பது குறித்து யு ட்யூப் வீடியோ கண்டு மகிழவும் ...


Apposthalan samlin
செப் 09, 2024 11:04

டுபாக்கூர் ஒரு மார்க் எடுத்த வடக்குக்கு வேலை 12 மார்க் எடுத்த தமிழனுக்கு பெயில் வேலை இல்லை இதான் பிஜேபியின் முகம் .


சமூக நல விரும்பி
செப் 09, 2024 10:13

Thank you Dinamalar for providing such employment notifications here. It is really beneficial not only to middle class category people but also to poor people. Thank you again.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை