உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா அசாமில் தொடரும் மழை

கர்நாடகா அசாமில் தொடரும் மழை

பெங்களூரு : கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், குடியிருப்புகள், சாலைகளை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கர்நாடகாவின், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பெங்களூரில் கடந்த 36 மணி நேரமாக பெய்த தொடர் மழையால் பல்வேறு பகுதி கள் தீவு போல மாறின. மக்கள், வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர். பெங்களூரில் பிரதான சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது.பள்ளங்களில் சிக்கிக்கொண்ட வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பலத்த மழை, இடி போன்ற காரணங்களாலும்; மின்சாரம் பாய்ந்தும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.வடகிழக்கு மாநிலமான அசாமிலும் கனமழை கொட்டித் தீர்க்கிறது. குவஹாத்தியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ