உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., அரசியலில் திடீர் திருப்பம்; பாஜ முதல்வரை சந்தித்த ராஜ் தாக்கரே!

மஹா., அரசியலில் திடீர் திருப்பம்; பாஜ முதல்வரை சந்தித்த ராஜ் தாக்கரே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக பாஜ முதல்வர் தேவேந்திர பட்னவிஸை ராஜ் தாக்கரே சந்தித்து பேசியுள்ளார். மஹாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து மீண்டும் கைகோர்த்துள்ளனர். அப்போது, பாஜவின் மொழி கொள்கை விவகாரத்தை கடுமையாக விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும், ராஜ் தாக்ரேவின் மஹாராஷ்டிரா நவநிர்மன் சேனாவும் இணைந்து மகாராஷ்டிரா கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால், ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. ஷஷாங் ராவ் தலைமையிலான அணி 14 இடங்களிலும், பாஜ அணி 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் மஹாராஷ்டிராவில் எதிர்வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தாக்கரே சகோதரர்களுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாஜ முதல்வர் தேவேந்திர பட்னவிஸை ராஜ் தாக்கரே சந்தித்து பேசியுள்ளார். இதனால், பாஜவுடன் கைகோர்க்க தாக்கரே சகோதரர்கள் திட்டமிட்டுள்ளார்களா? என்ற பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.சமீபத்தில் நடந்த இண்டி கூட்டணி கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் அவரும், அவரது கட்சியினரும் கடும் அதிருப்தி அடைந்த நிலையில் இத்தகைய சந்திப்பு நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SUBBU,MADURAI
ஆக 21, 2025 13:02

Uddhav and Raj Thackeray came together for the first time in BEST Employees Co-op Credit Soc polls The Result: Shashank Rao Panel : 14. Mahayuti backed Samruddhi Panel : 07. Thackeray Brothers : 00 0 0= 00


M Ramachandran
ஆக 21, 2025 12:47

பழனிக்கோ இரட்டை நிலை. உஙகளுக்க பல வித நிலை பாடு. திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் சேர் நிலைபாடு ஒன்று செந்திலாண்டிக்கு ஒரு நிலையய் பாடு துறை முருகனுக்கு ஒரு நிலையபாடு. செஞ்சட்டைய்ய வீரர்களுக்கு என ஒரு நிலை பாடு உங்களால் உச்சி முகர்ந்து ஆற தழுவி பட்டம் சூட்டி மகிழும் ஒரு நிலைபாடு. அடுத்து உங்க வீட்டு குஞ்சு குழுவானுக்கு முடிசூட்ட துடிக்கும் நிலைபாடு. இன்னும் எத்தனைய் எத்தனையோ.


vadivelu
ஆக 21, 2025 12:32

எப்படியோ பரம்பரை திருடர்களை அதிகாரத்திற்கு வராமல் இருக்க செய்யுங்க , போதும் 60 ஆண்டுகள் சூறை ஆடிட்டாங்க.


sankaranarayanan
ஆக 21, 2025 11:51

தாக்கரைகளை தாக்கி பேசினால் இந்டியா கூட்டணியிலிருந்து முரண்டு பிடித்து வெளியே வந்து விடுவார்கள் பிறகு பழைய குருடி கதவைத்திரடி என்றாற்போல பாரதிய ஜனதா பார்ட்டியுடன் சேர்ந்து கூட்டணியில் சேர்ந்து விடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை