உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய பிரபஞ்ச அழகியானார் ராஜஸ்தான் பெண்

இந்திய பிரபஞ்ச அழகியானார் ராஜஸ்தான் பெண்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - 2025'க்கான போட்டி நேற்று முன்தினம் நடந்தது. 48 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த மனிகா விஸ்வகர்மா, 22, 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா'வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' பட்டம் வென்ற ரேகா சின்ஹா மகுடம் சூட்டினார். 2வது இடத்தை உ.பி.,யின் தன்யா சர்மாவும், மூன்றாவது இடத்தை ஹரியானாவின் மேஹா தின்காராவும் பெற்றனர். புதிய மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்ந் தெடுக்கப்பட்டு உள்ள மனிகா இந்த ஆண்டு இறுதியில் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் நடக்கும், 'மிஸ் யுனிவர்ஸ்' எனப்படும் பிரபஞ்ச அழகி போட்டியில் நம் நாட்டின் சார்பில் பங்கேற்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை