உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலத்தகராறில் பெண்ணுக்கு மூக்கறுப்பு; துண்டிக்கப்பட்ட மூக்குடன் மருத்துவமனைக்கு ஓடிய பெண்

நிலத்தகராறில் பெண்ணுக்கு மூக்கறுப்பு; துண்டிக்கப்பட்ட மூக்குடன் மருத்துவமனைக்கு ஓடிய பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், நிலத் தகராறு காரணமாக பெண் ஒருவரின் மூக்கை அறுத்த சம்பவம் நடந்துள்ளது. துண்டிக்கப்பட்ட மூக்கை பையில் கொண்டு சென்ற அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தை சேர்ந்த, 40 வயது பெண் குக்கி தேவி. இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கிராமத்தில் நிலம் தொடர்பாக உறவினர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், குக்கி தேவி மற்றும் மகன் நிலத்தை பார்வையிட்டனர். அப்போது மருமகன் ஓம்பிரகாஷ் மற்றும் குக்கி தேவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அடிதடியாக மாறியது.அப்போது குக்கி தேவியை, உறவினர்கள் சிலர் பிடித்துக் கொண்ட நிலையில், ஓம் பிரகாஷ் கத்தியால் அவரது மூக்கை அறுத்து துண்டித்தார். வலியால் துடித்து கதறிய குக்கி தேவி, துண்டிக்கப்பட்ட மூக்கை பையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதலுதவி அளித்த டாக்டர் மகேஸ்வரி கூறியதாவது: மூக்கு கடுமையாக வெட்டப்பட்டு உள்ளதால், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மட்டுமே மீண்டும் இணைக்க முடியும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
டிச 19, 2024 12:14

ராமாயணத்தில் சூர்பனகை மூக்கறுப்பட்டதை கேட்டதுண்டு. அதன் பிறகு உண்மையில் நடந்துள்ளது இதுதான்.


Shiva
டிச 19, 2024 09:11

கழுத்துக்கு வந்தது மூக்கோடு போயிற்று


Shiva
டிச 19, 2024 09:09

கழுத்துக்கு வந்தது மூக்கோடு போயிற்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை