உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றினார் ராஜேஸ்வரி; சென்னை ஐ.ஐ.டி.,யில் இடம் பிடித்த பழங்குடி மாணவி நெகிழ்ச்சி!

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றினார் ராஜேஸ்வரி; சென்னை ஐ.ஐ.டி.,யில் இடம் பிடித்த பழங்குடி மாணவி நெகிழ்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தின் கல்வராயன் மலையை சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டி.,யில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ., தூரத்தில் கல்வராயன் மலை உள்ளது. இங்கு வசித்து வந்த கருமந்துறை பழங்குடியினத்தை சேர்ந்த ஆண்டி, கடந்தாண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீ கணேஷ் என்ற மகனும் உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1o4sxyb0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், ராஜேஸ்வரி பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417வது இடத்தை பிடித்தார். தற்போது, ராஜேஸ்வரி ஐ.ஐ.டியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். கல்வராயன் மலையில் செயல்படும் இந்த பள்ளியில் இருந்து ஐ.ஐ.டி. படிக்க தகுதி பெற்ற முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.மூன்றாவது குழந்தையாக ராஜேஸ்வரி, அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளியிலிருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் சாதனையை பார்த்து மகிழ்ந்து இருப்பார் என ஆண்டி மனைவி கவிதா தெரிவித்தார். ராஜேஸ்வரி 10ம் வகுப்பில் 438/500 மற்றும் 12ம் வகுப்பில் 521/600 மதிப்பெண்கள் பெற்றார்.தற்போதைய சாதனை குறித்து ராஜேஸ்வரி கூறியதாவது: தன்னை வழிநடத்தியதற்காக தனது ஆசிரியர்களுக்கு நன்றி. என் உடன்பிறப்புகள் படிப்பில் சிறந்தவர்கள், ஆனால் ஜே.இ.இ., தேர்வு பற்றி அவர்களுக்குத் தெரியாது.என் ஆசிரியர்கள் எனக்கு ஆதரவளித்தனர். இந்த சாதனை மேலும் பழங்குடியின மாணவர்கள் பெரிய கனவுகளைக் காண ஊக்குவிக்கும். சாதிக்க இங்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் வாழ்த்து

ராஜேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் 'Salute!' அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி, 12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், ஜேஇஇ தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து, சென்னை ஐஐடி.,யில் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன். மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது.கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன். அவரது பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, மாணவி ராஜேஸ்வரியின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், மாணவி ராஜேஸ்வரிக்கான படிப்பு செலவுகளை அதிமுக ஏற்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

lana
ஜூன் 06, 2025 11:58

இதே போல நீட் க்கும் உருப்படியான பயிற்சி கொடுங்க. neet தவறு என்றால் IIT படிப்பில் சேர JEE தவறு இல்லை யா. அதற்கு மட்டும் அரசு பயிற்சி. neet க்கு அரசியல் பயிற்சி யா


Sekar
ஜூன் 06, 2025 11:40

சாதனையாளர்கள் பிறப்பதில்லை சூழ்நிலைகளால் உருவாக்கப் படுகிறார்கள். ஒழுக்கத்துடன் கூடிய கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி நிச்சயம் ஒருநாள் வெற்றிதரும். ஐஐடியில் இடம் பிடித்த இந்த மாணவிக்கு வாழ்த்துக்கள்.


Subramanian
ஜூன் 06, 2025 07:50

வாழ்த்துகள், பாராட்டுகள்


Bala
ஜூன் 05, 2025 20:10

வாழ்த்துக்கள் பெண்ணே. வாழ்க வளமுடன் வளர்க தேசபக்தியுடன் தெய்வ பக்தியுடன் வெல்க தன்னம்பிக்கையுடன். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் வாழ்த்துகிறோம்


Padmasridharan
ஜூன் 05, 2025 18:46

வாழ்த்துகள் பெண்ணே. . "கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி" எந்த கல்வி கற்றாலும் உண்மையை அறிந்துகொண்டு பொய்யானவர்களுக்கு எதிராக நல்லவர்கள் ஒன்றிணைவதுதான் சமூகத்தை உயர்த்தும்.


Kumar Kumzi
ஜூன் 05, 2025 18:27

நன்கு படித்து மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரி


JayaSeeli
ஜூன் 05, 2025 16:26

வாழ்த்துக்கள் சகோதரி .... உன் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது. இந்த குழந்தையை எல்லா விதத்திலும் பாதுகாத்து கொண்டு செல்லும் கடமை அந்த கல்லூரிக்கு இருக்கிறது. ஆல் தி பெஸ்ட்


Bahurudeen Ali Ahamed
ஜூன் 05, 2025 15:53

இந்த பெண்தான் திராவிட மாடலுக்கு கிடைத்த சரியான பரிசு, நமது அரசு இவரின் படிப்பு செலவு அனைத்தையும் ஏற்பதாக சொன்னது சிறப்பு, திரு எடப்பாடி அவர்களும் சிறப்பித்தது அருமை


Kumar Kumzi
ஜூன் 05, 2025 18:29

இந்த சகோதரியின் படிப்பிற்கும் திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்?...


Bahurudeen Ali Ahamed
ஜூன் 09, 2025 11:57

குமார் தயவுசெய்து செய்திகளை முழுமையாக படித்துவிட்டு விமரிசனம் செய்யுங்கள், இந்த பெண்ணின் வெற்றிக்கு அவரின் முயற்சியும் அரசு பயிற்சிமையமும் ஒரு காரணம், இதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் அதுதான் உண்மை, நல்லது யார் செய்தாலும் பாராட்டவேண்டும், பாராட்ட மனமில்லையென்றாலும் இகழாமல் இருக்கவேண்டும்


Anand
ஜூன் 05, 2025 15:45

வாழ்த்துக்கள்...


Prasanna Krishnan R
ஜூன் 05, 2025 15:20

இனிமேல், அரசுப் பள்ளியிலேயே இதுபோன்ற பயிற்சிகளுக்கு தரமான ஆசிரியர்களை அதிகரிப்பது குறித்து முதல்வர் முடிவு செய்யலாம். டாஸ்மாக் எல்லா முறையும் தேர்தலில் உங்களுக்கு வெற்றியைத் தராது.


முக்கிய வீடியோ