மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
3 minutes ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
7 minutes ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
10 minutes ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
12 minutes ago
ஆமதாபாத்: குஜராத்தில், விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விளையாட்டு மையத்தின் உரிமையாளர்களில் ஒருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில், டி.ஆர்.பி., விளையாட்டு மையத்தில் மே 25ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 9 குழந்தைகள் உட்பட 28 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.. அனுமதியின்றி அரங்கத்தை செயல்பட ராஜ்கோட் நகராட்சி அனுமதித்ததாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில் 28 பேர் பலியாக காரணமாக இருந்த விளையாட்டு மையத்தின் உரிமையாளர்கள் பிரகாஷ் ஹிரன், ஜிதேந்திரா ஹிரன் ஆகிய சகோதரர்கள் என தெரியவந்தது.இதில் தீ விபத்து சம்பவத்தில் சிக்கி பிரகாஷ் ஹிரன் பலியானதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இறந்த உடல் டி.என்.ஏ., பரிசோதனை செய்ததில் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
3 minutes ago
7 minutes ago
10 minutes ago
12 minutes ago