உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலத்தீவுக்கு உதவி: ராஜ்நாத் உறுதி

மாலத்தீவுக்கு உதவி: ராஜ்நாத் உறுதி

புதுடில்லி: மாலத்தீவுக்கு பாதுகாப்பு தளவாடங்கள் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.நம் அண்டை நாடான மாலத்தீவுகளின் ராணுவ அமைச்சர் முகமது கசான் மமூன், மூன்று நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்துள்ளார். நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய அவர், இருதரப்பு பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசித்தார். குறிப்பாக, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது பற்றி அவர்கள் விவாதித்தனர்.நம் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் மத்திய அரசின் கொள்கையின்படி, மாலத்தீவுகளின் ராணுவத்தை பலப்படுத்தவும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தளவாடங்களை வழங்கவும் இந்தியா தயாராக இருப்பதாக நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.ராணுவ உதவிகளை அளிப்பதுடன், தங்கள் நாட்டின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக மாலத்தீவு ராணுவ அமைச்சர் முகமது கசான் மமூன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை