உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு

லக்னோ: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் பங்கை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாகிஸ்தான் வழக்கம் போலவே தோல்வியை எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. இந்திய மண்ணில் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த முயன்றது. அவர்கள் பொதுமக்களையும், வழிபாட்டுத் தலங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் நமது படைகள் பொருத்தமான பதிலடி கொடுத்தன.

அறுவை சிகிச்சை நிபுணர்கள்

குற்றவாளிகளைத் தண்டிக்கும் அதே வேளையில், அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை நமது பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர்.நமது வீரர்கள் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்று செயல்பட்டனர். அறுவை சிகிச்சையாளர்கள், நோய் உள்ள பகுதிகளில் துல்லியமாக கருவிகளை பயன்படுத்துவார்கள். நமது பாதுகாப்பு படையினரும் அது போன்று பயன்படுத்தினர். துல்லியமாக பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதி முகாம்கள்

மே 7ம் தேதி இந்திய ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல பயங்கரவாதிகள் முகாம்கள் தாக்கப்பட்டது. டாக்டர்களும், வீரர்களும் நாட்டிற்கு முக்கியமான வகையில் சேவையாற்றுவார்கள். ஒருவர் சுகாதாரத்தை பாதுகாப்பார். மற்றொருவர் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வார். பாகிஸ்தான் அதன் சொந்த பயங்கரவாதத்தால் அழிந்துவிடும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
மே 21, 2025 12:18

அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சையை பாதியிலேயே கைவிட மாட்டார்களே!


அப்பாவி
மே 21, 2025 11:40

யாரோ சொல்லி சிகிச்சையை பாதில நிறுத்தியதுதான் வருத்தம்


Padmasridharan
மே 21, 2025 09:19

இந்திய அரசு இலஞ்சம் வாங்கும் காவலர்கள், அதிகார பிச்சைக்காரர்களை அறுவை சிகிச்சை செய்தாலும் நல்லா இருக்கும்


Kasimani Baskaran
மே 21, 2025 03:58

எண்ணிலடங்கா தியாகங்களை செய்து இந்திய இராணுவம் இந்தியாவை காத்துவருகிறது. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. திராவிட கட்சிகளில் தங்கள் பிள்ளைகளை இராணுவத்துக்கு அனுப்புவார்கள் மிக மிக குறைவு - குறிப்பாக தீமக்காவினர் ஒருவர் கூட கிடையாது. அப்பேர்ப்பட்ட கேவலமான காட்சிகளை ஆதரிப்போர் ஆறறிவுள்ள மனிதர்களே கூட கிடையாது.


சமீபத்திய செய்தி