உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் தர்பார் பிரதிஷ்டை வரலாற்று சிறப்புமிக்க தருணம்: பிரதமர் பெருமிதம்

ராமர் தர்பார் பிரதிஷ்டை வரலாற்று சிறப்புமிக்க தருணம்: பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அயோத்தி ராமர் கோவிலில் இன்று ராமர் தர்பார் பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மற்றொரு பெருமைமிக்க மற்றும் வரலாற்று தருணத்தைக் கண்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் முதல் தளத்தில் அமைந்திருக்கும் ராமர் தர்பார் உள்பட 8 சன்னதிகளில் இன்று வேத சடங்குகள் முழங்க பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது. இது பற்றி பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:இந்த சடங்கு அயோத்தி ராமர் கோவிலில் இரண்டாவது பெரிய கும்பாபிஷேக விழாவாகும். முதலாவது ஜனவரி 22, 2024 அன்று ராம் லல்லாவுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இன்று நடைபெற்ற தெய்வீக மற்றும் பிரமாண்டமான ராமர் தர்பார் பிரதிஷ்டை, புனிதமான தருணம் ஆகும். ராமரின் பக்தர்களை பக்தியாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பியது.இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி