உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கொடி, ஸ்டிக்கர் விற்பனை பெங்களூரில் அமோகம்

ராமர் கொடி, ஸ்டிக்கர் விற்பனை பெங்களூரில் அமோகம்

பெங்களூரு: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி, ராமன் போஸ்டர்கள், பேனர்கள் அமோகமாக விற்பனையாகின்றன.பெங்களூரில் சில வாரங்களாக ராமர் உருவப்படங்கள் கொண்ட போஸ்டர்கள், பேனர்கள் விற்பனை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வியாபாரிகள் கூறுகின்றனர். காவி கொடி, ராமர் உருவம் கொண்ட ஸ்டிக்கர்கள், கோவில் படங்கள், கோவிலின் ஓவியம் இடம் பெற்ற டி - சர்ட்டுகள் உட்பட, ராமர் சம்பந்தப்பட்ட பொருட்கள் அமோகமாக விற்பனையாகின்றன.

ராமர் உருவப்படம்

இளைஞர்கள், ஹிந்து அமைப்பினர் ராமர் உருவப்படம் கொண்ட டி சர்ட்கள் அணிகின்றனர். நகரின் ஆங்காங்கே ராமர் உருவப்படம் கொண்ட பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.சிக்பேட்டில் மிக அதிகமான வர்த்தகம் நடந்துள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதால், சிக்பேட் கடை உரிமையாளர்கள், சங்கங்கள் விளக்கேற்ற முடிவு செய்துள்ளனர்.பல வீடுகளில் ராமர் உருவப்படம் உள்ள கொடிகளை பறக்க விட்டுள்ளனர். கோவில்களை சுத்தம் செய்து, பல்வேறு பூக்களால் அலங்கரித்துள்ளனர். இன்று காலையில் இருந்தே, ராம பஜனை, கோபூஜை, ஸ்ரீராம மந்திரம் பாராயணம் என, பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ராஜாஜி நகர் ஓரியன் மால்

அயோத்தி ராமர் கோவிர் கும்பாபிஷேகத்தை, நேரடி ஒளிபரப்பை மக்கள் பார்க்கும் வகையில், ராஜாஜி நகரின், பிரிகேட் அருகில் உள்ள ஓரியன் மாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அகில கர்நாடகா பிராமண மகாசபா மற்றும் மஹாலட்சுமி எஜுகேஷனல் ஒருங்கிணைப்பில், மஹாலட்சுமி லே அவுட்டில் உள்ள ராணி அப்பக்கா மைதானத்தில், சீதா கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. சிக்பேட் கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ரஞ்சித் ஜெயின் கூறியதாவது:சிக்பேட்டில் 200 கடைகள் உள்ளன. இந்த கடைகள், எங்கள் சங்கத்தின் அங்கமாக உள்ளன. மொத்த வியாபாரிகள் உட்பட, 1,900 டீலர்களை வைத்துள்ளோம். அனைத்து கடைகளிலும், ராமர் சம்பந்நப்பட்ட பொருட்கள், அதிகமாக விற்பனை ஆகின்றன. சிலர் ராமர் சிலைகளையும், மேலும் சிலர் போஸ்டர்கள், ஸ்டிக்கர்களையும் வாங்குகின்றனர். மக்கள் குடும்பத்துடன் வந்து, பொருட்களை வாங்குகின்றனர்.ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை, சிறப்பிக்கும் வகையில், பலரும் தங்கள் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்களில் ராமர் படம், அயோத்தி கோவில் உள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளனர். ராமர் படமும், கோவிலும் உள்ள கொடியை பொருத்தியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை