உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில் திறப்பு விழா: ஜன.,22ல் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் லீவு

ராமர் கோயில் திறப்பு விழா: ஜன.,22ல் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் லீவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 22ம் தேதி அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்விற்காக முக்கியமான தலைவர்கள், பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 22ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், மத்திய அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் காரணமாக, ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 22ம் தேதி மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜன 19, 2024 00:32

விழாவில் விருப்பமில்லாத மற்ற மதத்தினர் முழுநேரமும் அவர்களுடைய அலுவலகத்தில் பணிபுரியலாம். ஆட்சேபனை இல்லை.


subramanian
ஜன 18, 2024 21:28

நல்ல மனம் படைத்த மோடிக்கு நன்றி


RADE
ஜன 18, 2024 20:31

இது ரெண்டும் கெட்ட மாறி இருக்கு, அதற்கு மேல வீட்டில் இருந்து யார் வருவார்கள் வேலைக்கு. மக்கள் இதை நம்பி எப்படி அங்கு போய் சேர முடியும் வேலை நிமித்தமாக. தபால் துறை வாங்கி எல்லாம் மூன்று மணிக்கு மேல சில பணிகள் மட்டும் அனுமதி இருக்கு, சிலதுக்கு இல்லை.


mothibapu
ஜன 18, 2024 16:25

இந்த அரை நாள் விடுமுறை தேவையற்றது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை