உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம்: கவலையில் ஆர்.எஸ்.எஸ்.,

ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம்: கவலையில் ஆர்.எஸ்.எஸ்.,

லக்னோ: உ த்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்ட ஒரு பெரும் இயக்கமே நடத்தி போராடி, கடைசியில் கோவிலையும் கட்டி முடிக்க, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பெரும் உதவியாக இருந்தது. ஆனால், சமீபத்தில் ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.ஆர்.எஸ்.எஸ்., என்றாலே ஒழுக்கம், கடமை, நேர்மை என, சொல்வது வழக்கம். இந்த குணங்கள் இப்போது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் குறைந்து வருகிறதோ என்பதை, உண்டியல் திருட்டு அம்பலப்படுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6sbpq2q4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த திருட்டு விவகாரம், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை கடுப்பாக்கியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர் எவ்வளவு பெரிய அதிகார மையமாக இருந்தாலும் சரி, அவர்களை கைது செய்தே ஆக வேண்டும் என, கூறியுள்ளார். இது தொடர்பாக, பிரதமர் மோடியிடமும் அவர் பேசி உள்ளாராம்.ஏற்கனவே உ.பி., அரசின் சிறப்பு புலனாய்வு குழு, எட்டு பேரை கைது செய்துள்ளது. ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச்செயலராக இருந்தவர், சம்பத் ராய். இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர். கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட, அப்போது இவரை செயலராக நியமித்தது மத்திய அரசு. இப்போது திருட்டு விவகாரத்தில் தார்மிக பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார்.பொதுவாக, பிரபல கோவிலின் அறக்கட்டளை எனில், அந்த மாநில முதல்வர், அதில் உறுப்பினராக முக்கிய பதவி வகிப்பார். ஆனால், அயோத்தி அறக்கட்டளையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பதவி அளிக்கவில்லை. அவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்பதால் தான், பதவி கொடுக்கவில்லை என, சொல்லப்பட்டது. ஆனால் இப்போது, ஆர்.எஸ்.எஸ்.,சைச் சேர்ந்த சம்பத் ராய், இந்த திருட்டிற்கு காரணமாகி விட்டார். விரைவில், அவர் கைதாகலாம் என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

விருமாண்டி
ஜூலை 05, 2026 23:14

உண்டியல் திருட்டு மட்டுமா? பல்லாயிரம் கோடிகள் நிலம் வாங்கியதிலும் கோல்மால் நடந்துள்ளதே, அதை அப்படியே அமுக்குறியே ?


விருமாண்டி
ஜூலை 05, 2026 23:11

இதைப் பத்தி வாயைத் தொறக்காமல் உங்க பிரைம் மினிஷ்ட்டர் பறந்து ஒளியிறாரே. அது கவலையளிக்கவில்லையா?


விருமாண்டி
ஜூலை 05, 2026 23:09

எல்லாம் நேருவின் தவறு.


விருமாண்டி
ஜூலை 05, 2026 23:07

மாட்டிக்கிட்டாங்களே என்று கவலை


Moorthy
ஜூலை 05, 2026 21:06

திருடர்கள்.


Gnana Subramani
ஜூலை 05, 2026 16:45

ஏன் திருடியவர்களின் வீட்டை இன்னும் புல்டோசர் வைத்து இடிக்கவில்லை


Gnana Subramani
ஜூலை 05, 2026 16:27

மாட்டிக் கொண்டவர்கள் ஆர் எஸ் எஸ் சேர்ந்தவர்கள் இல்லை என்று முடித்து விடலாம்.


Appan
ஜூலை 05, 2026 13:06

மத்தியில் ஆளும் பிஜேபி நீர்த்து போய்விட்டது. ஊழல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. இதை சரி செய்யவில்லை என்றால் தமிழகத்தில் நடந்தது போல் வரும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி காணாமல் போய்விடும். ஆர். எஸ் .எஸ் என்ற இயக்கம் இந்துத்வ மதம் சார்ந்து செயல் படுகிறது. இந்த கொள்கை மாறிவரும் இந்திய சமூகம் ஆதரிக்குமா ..?.இப்போ தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சி என்று கோசம் போட்டு ஆட்சிக்கு வந்து உள்ளார்கள். இது மத்தியிலும் வரலாம்.


NALAM VIRUMBI
ஜூலை 05, 2026 12:26

புல்டோசர்கள் ரவுடிகள் மற்றும் தேச விரோத சக்திகள் மீது மட்டுமே ஏவப்படுகின்றன. யோகிஜி ஒரு சிறந்த நிர்வாகி. நேர்மையானவர். அவர் மத ரீதியாக மக்களை பாகுபடுத்துவது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.


NALAM VIRUMBI
ஜூலை 05, 2026 12:22

கட்டுப்பாடான ஆர் எஸ் எஸ் என்ற மாபெரும் இயக்கத்தில் ஒன்றிரண்டு கருப்பாடுகள் இருக்கின்றது போலும். அவர்களை களை எடுத்துவிட வேண்டியது தான்.மற்றபடி இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது?


GUNASEKARAN RANGASAMY
ஜூலை 07, 2026 12:10

அபகரிக்கும் ஆக்கிரமிக்கும் அநியாயங்களை செய்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை