மேலும் செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள்-7
08-Mar-2025
பொறுமையும் நம்பிக்கையும்ஒருவருக்கு மனதில் நினைத்தது அப்படியே நடக்கிறது. வேறு ஒருவருக்கோ நினைக்காதது நடக்கிறது. இவர்களை போன்றவர்கள் எப்படி மாறுகிறார்கள் தெரியுமா... நினைத்தது நடந்தால் இன்பத்தில் மூழ்கி ஆணவத்துடன் தற்பெருமை பேசுகிறார்கள். இதுவே நினைத்தது நடக்காவிட்டால் வெறுப்பின் உச்சத்திற்கே சென்று தீயசெயலில் இறங்கி விடுகிறார்கள். ஆனால் இறைநம்பிக்கையாளர் எப்படி இருப்பார் தெரியுமா... 'நினைத்தது நடக்கும் வரை காத்திருக்கிறேன். இறைவன் என்ன நிகழ்த்த விரும்புகிறானோ அது நடக்கட்டும்' என்பார். இதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது பொறுமை, நம்பிக்கை. செய்யும் முயற்சியில் வெற்றி பெறும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் நிச்சயம் அவன் வெற்றி பெறச் செய்வான் என்ற நம்பிக்கையும் வேண்டும். 'நம்பிக்கை கொண்டோரே! பொறுமை, தொழுகையுடன் இறைவனிடம் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அவன் பொறுமை உடையவர்களுடன் இருக்கிறான்'.இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி
08-Mar-2025