உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரமேஷ் ஜார்கிஹோளி வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்

ரமேஷ் ஜார்கிஹோளி வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்

பெங்களூரு : கூட்டுறவு வங்கியில் 439 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி மீது பதிவான வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு, கர்நாடகா அரசு மாற்றி உள்ளது.பெலகாவி கோகாக் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி, 63. கோகாக்கில் உள்ள சவுபாக்ய லட்சுமி சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குனராக இருந்தார். இந்த ஆலையை தொடங்கவும், விரிவுபடுத்தவும் 2013 முதல் 2017 வரை, பெங்களூரு சாம்ராஜ்பேட்டில் உள்ள, கர்நாடகா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கியில், ரமேஷ் ஜார்கிஹோளி 232 கோடியே 88 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வட்டி, கடனை திரும்ப செலுத்தவில்லை. கடன் வாங்கும்போது, வங்கியில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 'வட்டி, கடனை அடைக்கும் வரை, சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விலக மாட்டேன்' என, ரமேஷ் ஜார்கிஹோளி கூறியிருந்தார்.ஆனால் வங்கி அதிகாரிகளுக்குத் தெரியாமல், நிர்வாக இயக்குனர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு, பெங்களூரு வி.வி., புரம் போலீசில், வங்கியின் தலைமை பொது மேலாளர் ராஜண்ணா புகார் அளித்தார்.அந்த புகாரின்பேரில் ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட மூன்று பேர் மீது, இரண்டு பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம் செய்து, கர்நாடகா அரசு நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ