உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனேயை அலற வைத்த இளம் பெண் பலாத்கார சம்பவம்; குற்றவாளிகள் வரைபடம் வெளியீடு

புனேயை அலற வைத்த இளம் பெண் பலாத்கார சம்பவம்; குற்றவாளிகள் வரைபடம் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: புனேயில் 21 வயது இளம் பெண். 3 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.மஹாராஷ்டிராவின் புனேயைச் சேர்ந்த 21 வயது பெண், தன் ஆண் நண்பருடன் போப்தேவ் காட் என்ற பகுதி சென்றுள்ளார். அப்போது அங்கு சமூக ஆர்வலர் என கூறிக்கொண்டு அறிமுகமான மூன்று நபர்கள் அவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.பின் திடீரென ஆண் நண்பரை தாக்கி மரத்தில் கட்டி வைத்துவிட்டு இளம் பெண்ணை மிரட்டி, வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். நேற்று நடந்த சம்பவம் இன்று வெளியான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கோந்த்வா போலீசில் புகார் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக ஒருவன் கைது செய்யப்பட்டதாகவும் இருவர் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.இளம் பெண் கூறிய அடையாளத்தை கொண்டு மற்ற இரு குற்றவாளிகளின் வரைபடத்தை போலீசார் வெளியிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் 15 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் மஹாராஷ்டிரா முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
அக் 05, 2024 05:58

மாட்டுனவனை உடனடியாக போட்டுத்தள்ளவும். மத்தவங்கள அப்புறமா புடிக்கலாம். கோர்ட், கேசுன்னு போனா விடுதலை நிச்சயம். கீழ்நீதிமன்றங்ஜள் தூக்கு தண்டனை விதித்தாலும், சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வெச்சு விசாரிச்சு விடுதலை செஞ்சுரும்.


SANKAR
அக் 05, 2024 03:23

will Maharashtra CM resign?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 05, 2024 01:24

ஹரியானா அரோகரா. மகாராஷ்டிரா கூட அதே தான்.


Anantharaman Srinivasan
அக் 04, 2024 22:54

மாட்டிக்கொண்ட ஒருவனை நோண்டி நொங்கெடுத்தால் மற்ற இருவர் விவரம் தெரியுமே


ஜெய்ஹிந்த்புரம்
அக் 05, 2024 01:23

பெண்ணிடம் கேட்டு இருவரின் முகத்தை வரைந்தது ஏன் ? பிடிபட்டவனிடம் கேட்கலாமே? எங்கேயோ உதைக்குதே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை