உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேட்கவே மனசு வலிக்கும்; அமெரிக்கா சென்றடைய இந்தியர்கள் படும்பாடு!

கேட்கவே மனசு வலிக்கும்; அமெரிக்கா சென்றடைய இந்தியர்கள் படும்பாடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சட்டவிரோதமாக அமெரிக்காவை அடைவதற்கு இந்தியர்கள் அடர்ந்த காட்டு பகுதிகளில் பயணம் செய்கின்றனர். பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர். 12% பேர் இறந்து விடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் செல்வச்செழிப்பும், எண்ணற்ற வேலை, தொழில் வாய்ப்புகளும் உலகெங்கும் உள்ள மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இதனால் அந்நாட்டுக்கு குடி பெயர்வதில் இந்தியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சட்டப்படி விசா பெற்று செல்வதில் இருக்கும் சிரமங்கள் காரணமாக பலரும் சட்ட விரோதமாக செல்கின்றனர். அந்நாட்டுக்குள் நுழைவதற்கு கரடு முரடான, அடர்ந்த காட்டுப் பகுதியில் பயணம் செய்கின்றனர். இப்படி இந்தியர்கள் படும் துயரங்கள் குறித்து ஆங்கில செய்தி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து அடர்ந்த காட்டுப்பகுதியில் பயணம் செய்யும் போது 12 சதவீதம் பேர் இறந்து விடுகின்றனர்.

பாலியல் வன்கொடுமை!

மாபியாக்களால் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். சட்ட விரோதமாக குடியேறுபவர்களை அமெரிக்காவிற்குள் அழைத்து செல்ல மனித கடத்தல்காரர்கள் ரூ.40 லட்சம் முதல் 80 லட்சம் வரை வசூல் செய்கின்றனர். இந்த பயண காலம் இரண்டு ஆண்டு வரை ஆகலாம். பனாமா, கோஸ்டாரிகா, சால்வடார் மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளில் உள்ள மாபியா கும்பல்களை நம்பி, இந்தியர்கள் அதிக துயரங்களை எதிர்கொள்கின்றனர்.

போலி விசா!

அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக நுழைய இந்தியர்கள் படும் கஷ்டங்கள் நரகத்திற்கு செல்வதற்கு சமமாக இருக்கும். மாபியா கும்பல் எளிய முறையில் போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை உருவாக்கி விடுகிறது. இந்த கடத்தல்காரர்களில் பெரும்பாலானவர்கள், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்தவர்களை ஏமாற்றுகின்றனர். பெண்களுக்கு பயங்கரமான விஷயங்கள் நடக்கின்றன. அமெரிக்காவை அடைய அவர்கள் அதைத் தாங்கிக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. சமீபத்தில் 30 வயதான தொழில்நுட்ப பட்டதாரியான மல்கீத் சிங், அமெரிக்காவை அடைய முயன்றபோது கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டார். இவ்வாறு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நிகழும் கொடூரம்!

மெக்சிகோ வழியாக ஆபத்தான மலையேற்றத்தில் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார் என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

S Ramkumar
செப் 05, 2024 15:29

ரொஹிங்கியாக்களுக்கு இந்தியா ஏன் அடைக்கலம் கொடுக்க வேண்டும். இஸ்லாமியர்களே இஸ்லாமியர்களை கொள்ளுவார்களாம் அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்கவேண்டுமாம். எதற்கு. பாகிஸ்தான், பங்களாதேஷ் செல்லலாமே.


Ramesh Sargam
செப் 04, 2024 21:52

அமெரிக்க மோகம் இன்னும் நம் மக்கள் மனதை வாட்டி எடுக்கிறது. அந்த மோகத்திலிருந்து முதலில் மக்கள் மீளவேண்டும். தாய்நாட்டிலேயே வேலை தேட வேண்டும். இல்லையென்றால் தனியாக தொழில் துவங்க வேண்டும். எவ்வளவோ நல்ல படித்த இளைஞர்கள் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு, இன்று இந்தியா திரும்பி சொந்த தொழில் செய்து பிழைக்கவில்லையா? லட்சக்கணக்கில் சம்பாதிக்கவில்லையா?


Jay
செப் 04, 2024 17:35

தென் அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் பொதுவாக அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக குடியேறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்கின்றனர் இது அறிந்த செய்தி தான். ஆனால் இந்தியர்கள் அவ்வாறு முயற்சி செய்கிறார்கள் என்பதை நம்பவே முடியவில்லை. இங்கு பஞ்சமோ, நிலையற்ற அரசியல் தன்மை வேலையின்மை அப்படியெல்லாம் அளவுக்கதிகமாக இல்லை.


ராமகிருஷ்ணன்
செப் 04, 2024 16:48

அப்படி என்ன இருக்கு.


சமூக நல விரும்பி
செப் 04, 2024 14:19

முறையாக செல்பவர்கள் எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். எதற்கு திருட்டு தனம். திருடினால் என்றும் ஆபத்து தான்.


Ms Mahadevan Mahadevan
செப் 04, 2024 13:22

பேராசை தான் காரணம். தாய்நாட்டில் சொந்த ஊரில் இருக்கும் நிம்மதி வேரங்கும் கிடைக்காது. பேராசை காரணமாக சட்ட விரோத செயலில் எடுபட்டலால் இப்படி கஷ்ட பட வேண்டியதுதான்


thiagarajan paulsamy
செப் 04, 2024 13:14

ரோஹிங்கியாக்களை பாத்திருக்கிங்களா? அவர்கள் எப்படி ஆபத்தானவர்கள் என்று தெரியுமா? சும்மா இங்க உக்காந்துகிட்டு எதையாவது சொல்லக்கூடாது


Sivagiri
செப் 04, 2024 12:35

40 - 50 லட்சம் செலவு பண்ணி , ரெண்டு மூணு வருஷம் கஷ்டப்பட்டு , அடிபட்டு மிதிபட்டு , கள்ளத்தனமாக நுழைவதற்கு பதில் , இங்கே இந்தியாவில் சில லட்சம் செலவு செய்தாலே , பிரகாசமான வாழ்க்கை வாழலாமே . . ?. . .


Balasubramanian
செப் 04, 2024 12:01

இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது! இருநூறு ஆண்டுகள் ஆண்டு நம்மை சீரழித்த இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தை 75 ஏ ஆண்டுகளில் நாம் விஞ்சி விட்டோம்! (அதுவும் கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதாரம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது) இன்னும் 25 ஆண்டுகளில் பிரிட்டன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டு விடும்! இனியேனும் பாரத நாடு நம் நாடு என்று நம்மவர்கள் மதித்து அதன் பாரம்பரியம் பண்பாடு முதலியவற்றை பேணிக் காத்து தங்கள் மெய் வருத்தத்தை உடல் உழைப்பை (நிச்சயம் அது கூலி தரும் -திருவள்ளுவர் வாக்கு) முயற்சியை தாய் நாட்டுக்கு அர்பணித்தால் அனைவருக்கும் நலம்


S Sivakumar
செப் 04, 2024 11:29

இந்தியாவில் ஊழல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த ஊழல் பணத்தை அதை முறையாக அரசுக்கு சொந்தமாக்கி பல தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் இந்த நிலைமை வாராமல் இருந்திருக்கலாம்.