உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த பலாத்கார குற்றவாளி மரணம்

போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த பலாத்கார குற்றவாளி மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கவுகாத்தி: அசாமில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர், போலீசிடம் இருந்து தப்பிக்க குளத்தில் விழுந்து மரணமடைந்தார்.அசாமின் நகோவான் பகுதியில் டியூசன் சென்று விட்டு சைக்களில் திரும்பிய 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பகுதியில் இருந்த குளம் அருகே மயக்க நிலையில் கிடந்த சிறுமியை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தன்னை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக போலீசில் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது.இச்சம்பவம் தொடர்பாக தபாசுல் இஸ்லாம் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று( ஆக.,23) இரவு தபாசுல் இஸ்லாமை, சம்பவம் நிகழ்ந்த குளத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவர், தப்பியோட நினைத்து குளத்திற்குள் குதித்தார். உடனடியாக போலீசார் நீச்சல் வீரர்களை அழைத்து அவரை தேடினர். தீவிர தேடுதலுக்கு பிறகு இன்று அதிகாலை 3 மணியளவில் தபாசுல் இஸ்லாம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Azar Mufeen
ஆக 25, 2024 02:00

இந்த இறைவன் குற்றம் நடக்கும் போது விழி இருந்தும் பார்ப்பதில்லையோ, செவி இருந்தும் கேட்பதில்லையோ, கைகள் இருந்தும் தடுப்பதில்லையோ மொத்தத்தில் எந்த கடவுளும் இல்லை


God yes Godyes
ஆக 24, 2024 17:31

அந்த பெண் முஸ்லிம் பெண்ணல்ல. வேறு ஜாதி பெண்களிடம் மோகம் அதிகம்.தன் ஜாதி பெண்ணுன்னா கேக்கணும்


பேசும் தமிழன்
ஆக 24, 2024 16:37

தபசுல் இஸ்லாம் கைது .... இது பிஜெபி அரசின் அராஜகம்.... இதற்க்கு கூட உரிமையில்லையா.... இது சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என்று ஒரு கும்பல் உருட்டுவாங்க பாருங்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 24, 2024 15:13

இச்சம்பவம் தொடர்பாக தபாசுல் இஸ்லாம் ..... அஸ்ஸாம் பாஜக அரசு உள்ள மாநிலம் ன்னு உருட்டுனவங்க இந்தப்பேரைப் பார்த்துவிட்டு நிறுத்திப்புட்டாய்ங்க ....


பேசும் தமிழன்
ஆக 24, 2024 15:07

சபாஷ்..... மீதி இரண்டு பேரையும் இதே போல..... குளத்தில் குதித்து தப்பி ஓட வையுங்கள்..... அதாவது மேலே அனுப்பி வையுங்கள்.... அவர்கள் உயிருடன் இருந்து ஒன்றையும் கிழிக்க போவதில்லை.


TSRSethu
ஆக 24, 2024 14:23

சபாஷ். ஊருக்கு ஒரு குளம் வேண்டும்.


பாமரன்
ஆக 24, 2024 12:35

நேற்று கிருஷ்ணகிரி சம்பவத்துக்காக சட்டம் ஒழுங்கு முக்கியம்.. போலீஸ் எப்படி அலட்சியமாக இருக்லாம்னு ஃபீல் பண்ணி கருத்து போட்ட குருத்துகள் சைலண்ட் மோட்ல இருந்து வரவும்...ப்ளீஜ்... என்னை பொறுத்தவரை போலீஸே பொலி குடுத்திருந்தாலும் சரிதான்


Kasimani Baskaran
ஆக 24, 2024 13:51

தண்டிப்பது காவல்துறை வேலை இல்லை. ஆதாரங்களை திரட்டி இபிகோ படி குற்றவாளி என்று கருதப்படுபவர் மீது வழக்கு தொடர்ந்து தொய்வில்லாமல் அதை நடத்த வேண்டும். கிருஷ்ணகிரி சம்பவம் திராவிடத்தனமானது. போலி என்சிசி ஆசிரியரை வைத்து பள்ளி நிர்வாகம் போலி கேம்ப் நடத்தியுள்ளது.


Ramesh Sargam
ஆக 24, 2024 12:22

கடவுள் பார்த்தார், இவரை காப்பாற்றினால், நீதிமன்றம் போதிய சாட்சியம் இல்லை என்று கூறி விடுவித்துவிடும். இப்படி இவர் உயிரை பறிப்பதுதான் சரி என்று பறித்துவிட்டார். கடவுளுக்கு நன்றி.


வைகுண்டேஸ்வரன்
ஆக 24, 2024 13:01

கடவுள் ஏன் அந்த 14 வயது சிறுமியை, அந்த கொடூர சம்பவத்தில் இருந்து காப்பாற்றவில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 24, 2024 15:16

கேட்கவே மனம் கலங்குது .... பாலைவனத்தில் 4 நாள் பரிதவித்த இளைஞர் பலி ....


enkeyem
ஆக 24, 2024 19:57

இது தான் கர்மா. யாரையும் விடாது


புதிய வீடியோ