உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் வேகம் பெறும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; இதுவரை 23 பேர் பலி

கேரளாவில் வேகம் பெறும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; இதுவரை 23 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்; கேரளாவில், மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒரு வகையான மூளைக்காய்ச்சலாகும். 104 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள நிலவரப்படி 23 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளதாவது; இன்றுடன் சேர்த்து மொத்தம் 104 அமீபிக் தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு எதிராக அரசு தீவிரமாக போராடி வருகிறது.கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. கோழிக்கோடு, மலப்புரத்திலும் தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2023ம் ஆண்டில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதை அடுத்து, மூளைக்காய்ச்சல் தொடர்பான நோய் தொற்றுகளை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். அதன் பயனாக, மூளைக்காய்ச்சல் பற்றிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக பெறப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 104 பேருக்கு இந்த தொற்று உள்ளது. அவர்களில் 23பேர் பலியாகி இருக்கின்றனர்.இவ்வாறு அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தியாகு
அக் 12, 2025 21:45

கேரளாவில் வேகம் பெறும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று. ஹி...ஹி...ஹி... இந்த தோற்று டுமிழ்நாட்டு மக்களுக்கு வர வாய்ப்பேயில்லை. ஏன்னா, டுமிழ்நாட்டு மக்கள் காலம் காலமாக கட்டுமர திருட்டு திமுகவிற்கு ஓட்டு போட்டு போட்டு அவர்கள் மூளையில் எதுவுமே இல்லாமல் கெட்டுப்போய் கிடக்கிறது. அமீபாக்கள் நல்ல அறிவான சத்தான மூளைகளைத்தான் தேடிப்பிடித்து உண்ணும். கெட்டுப்போன மூளைகளை விரும்பாது. அதனால் டுமிழக மக்களே நீங்கள் யாரும் அமீபா தொற்றைப்பற்றி கவலைகொள்ள வேண்டாம்.


ராமகிருஷ்ணன்
அக் 12, 2025 22:16

மூளை இருக்கிறவர்களுக்கு தான் மூளை காய்ச்சல் வரும். மூளை இல்லாதவர்களுக்கு வர வாய்ப்பு இல்லை. நீங்கள் எப்படி.


புதிய வீடியோ