உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எலி கழிவு, வண்டு; சுகாதார சீர்கேடாகும் அப்சல்யூட் பார்பிக்யூ உணவகம்

எலி கழிவு, வண்டு; சுகாதார சீர்கேடாகும் அப்சல்யூட் பார்பிக்யூ உணவகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள, 'அப்சல்யூட் பார்பிக்யூ' உணவகங்களில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை கண்டுபிடித்தனர். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், 'அப்சல்யூட் பார்பிக்யூ' உணவகங்கள் செயல்படுகின்றன. இங்கு, வகை வகையான அசைவ மற்றும் சைவ உணவுகள், 'அன்லிமிடெட்'டாக கிடைக்கும். இதில் ஒருவருக்கு, அசைவ உணவுக்கு 700 - 800 ரூபாய்; சைவத்துக்கு 600 - 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புகார் ஹைதராபாதில் இயங்கும் அப்சல்யூட் பார்பிக்யூ உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன்படி, ஏ.எஸ்.ராவ் நகர், கொம்பள்ளி, மெடிபள்ளி, பஞ்சாரா ஹில்ஸ், ஜூபிலி ஹில்ஸ், கச்சிபவுலி, செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் அப்சல்யூட் பார்பிக்யூ உணவகங்களில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சமீபத்தில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, பெரும்பாலான உணவகங்களில், அழுக்கு பாத்திரங்கள், அசுத்தமான தரைகள், சுகாதாரமற்ற கை கழுவும் பகுதிகள், துர்நாற்றமுடைய குளிர்சாதன பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கச்சிபவுலி, பஞ்சாரா ஹில்ஸ் பகுதிகளில் செயல்படும் உணவகங்களில், கரப்பான் பூச்சி, ஈக்கள் தொல்லை இருந்தது. கோரிக்கை மெடிபள்ளி உணவ கத்தில், காலாவதியான உணவு இருந்தது; அழுகிய பழங்கள் இருந்தன. ஏ.எஸ்.ராவ் நகரில் உள்ள கிளையில், வண்டுகள் நிறைந்த மாவு, ரேக்குகளில் எலி மலம், துருப்பிடித்த பொருட்கள் இருந்தன. இந்த உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக வலைதளங்களில் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
செப் 12, 2025 06:59

இழுத்து மூடாம ரெய்டுக்கு போனவங்களும் ஒரு வெட்டு வெட்டியிருப்பாங்களோ?


angbu ganesh
செப் 12, 2025 09:51

இன்னும் நீங்க ஹைதராபாத்தை தமிழ் நாடுண்ணே நெனச்சிட்டு இருக்கீங்களா


தியாகு
செப் 12, 2025 06:36

பார்பிக்யூ உணவகங்கள் பெரும்பாலும் மூர்க்க கூட்டங்களால் நடத்தப்படுபவை. சாதாரணமாக அரிசி சோறு, கறி குழம்பு, கறி வறுவல் என்று மட்டும் இருந்த அசைவ உணவகங்களை கேடு விளைவிக்கும் பார்பிக்யூ உணவகங்களாக மாற்றியதில் மூர்க்க கும்பலுக்கு பெரும் பங்கு உண்டு.


நிக்கோல்தாம்சன்
செப் 12, 2025 06:09

அவனுங்க ஹோட்டலில் சாப்பிட எல்லா தமிழக அரசியல்வாதிகளுக்கும் ஒருவார கால அவகாசம் கொடுங்க


Iyer
செப் 12, 2025 05:07

வழக்கமாக தினமும் - ஹோட்டல்களில் சாப்பிட்டால் - ஒரு வருடத்திற்குள் - சக்கரை, HIGH BP , குடல் புற்று உண்டாக மிக மிக அதிக வாய்ப்புகள் உண்டாகலாம். அதே போல் வழக்கமாக மாமிச உணவு உண்பவர்களுக்கு கட்டாயம் குடல் புற்று அல்லது RECTAL CANCER உண்டாகும். வீட்டிலேயே சமைக்கப்பட்ட சாதத்துடன் பருப்பும் மோரும் சேர்த்து ஒருவேளையும் + சமைக்காத பழம் காய்கறி SALAD ஒருவேளை உண்டு வந்தால் கடைசி மூச்சு வரை நோயின்றி வாழலாம்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
செப் 12, 2025 06:44

என்ன செய்ய? மக்கள் எவ்வளவு அவதி பட்டாலும் திருந்த மாட்டார்கள்.


Kasimani Baskaran
செப் 12, 2025 03:55

சுகாதாரமற்ற உணவு வழங்குவது குற்றமல்ல என்று சொல்வது போல இருக்கிறது. கடைக்கு சீல் வைத்து இருக்கவேண்டும்.


Kumar Kumzi
செப் 12, 2025 01:49

பேருல மூர்க்க வாடை அடிக்குதே அப்போ சரியா தான் இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை