உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலதிபர் ரத்தன் டாடா உயில்; சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கு சொத்து!

தொழிலதிபர் ரத்தன் டாடா உயில்; சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கு சொத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா எழுதிய உயிலில், சமையல்காரர், உதவியாளருக்கு சொத்து வழங்கியது மட்டுமின்றி, வளர்ப்பு நாயை பராமரிக்கவும் சொத்து எழுதி வைத்துள்ளார்.பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு சொத்துக்கள் அதிகம். அந்த சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி இருக்கிறார்.

அதில் உள்ள விவரங்கள் பின்வருமாறு

* ரத்தன் டாடாவின் ரூ.10,000 கோடிக்கு மேலான சொத்துக்களில் இருந்து பெரும்பகுதி டாடா அறக்கட்டளைக்கு செல்லும்.* அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா (தாயின் இரண்டாது திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்) ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்துள்ளார். * ரத்தன் டாடாவிடம் நீண்ட நாளாக வேலை பார்த்து வருபவர் ராஜன் ஷா. இவருக்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ள டாடா, தன் வளர்ப்பு நாயான டிட்டோவை ராஜன் ஷா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.* தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை டாடா எழுதி வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

sundaram sundaram
அக் 27, 2024 16:16

அருமை, உண்மை ,நன்மை


V.KIRUBANIDHI REDDY
அக் 27, 2024 07:41

எனக்கு யாரும் இல்லயே


K.S. Varadharajan
அக் 27, 2024 01:03

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் இவரின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். இவரின் எண்ணங்கள் செயல்களை நம்மால் முடிந்த வரை பின்பற்ற வேண்டும். நம் நாட்டின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருதை இவருக்கு வழங்கிட வேண்டும்


Nachimuthu .K
அக் 26, 2024 11:34

Great person ... no words to say


Mohamed Faizal
அக் 26, 2024 11:28

? கிரேட் ஹியூமன் பேயிங் ரத்தன் டாடா


santhosh ramadoss
அக் 26, 2024 08:43

இருந்தும் மக்கள் மனதில் வய்க்கின்ற கைலியுக கர்ணனன்


N Annamalai
அக் 26, 2024 05:04

மிக நிறைவான வாழ்க்கை என்று எல்லோருக்கும் சொல்லி உள்ளார் .


muthu
அக் 25, 2024 23:03

Those affected tata company worker due to tata company expired chairman mistake shall be given some money aid to get some relief from the sin commited


Manivel Chandran
அக் 25, 2024 22:42

உண்மையாகவே அருமையான குணங்களையுடையவர் ரதன் டாடா அவர்கள். இவர் செய்திருக்கும் காரியத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லி பாராட்டமுடியாது. யாருமே செய்ய முடியாத ஒன்றை செய்து ஒரு முன் மாதிரியான மனிதராக எல்லார் மனதிலும் நிலைத்து நிற்கும்படி நற்செயலை செய்துள்ளார்.


Constitutional Goons
அக் 25, 2024 21:58

டாடாவுக்கு இருக்கும் சொத்தை பார்த்தால் எழுத்துவைத்ததெல்லாம் அவர் போடும் பிச்சையைப்போல இருக்கும்


Prabath Prabath
அக் 26, 2024 07:03

சூப்பர்


முக்கிய வீடியோ