உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 டன் தங்கம்!: இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டுவந்த ரிசர்வ் வங்கி

100 டன் தங்கம்!: இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டுவந்த ரிசர்வ் வங்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இங்கிலாந்து வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. 100 டன் தங்கத்தை நாட்டிலுள்ள தனது பெட்டகங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அந்த தங்கம், சிறப்பு விமானம் மூலம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்டது.நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அண்மைக்கால தரவுகளின்படி, மார்ச் மாத இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் 822.1 டன் தங்கம் இருந்தது. அதில் 413.8 டன்கள் வெளிநாடுகளில் உள்ளன. கடந்த நிதியாண்டில் வாங்கிய 27.5 டன்கள் சேர்த்து, சமீபத்திய ஆண்டுகளில் தங்கத்தை வாங்கிய மத்திய வங்கிகளில் ஆர்பிஐ.,ம் ஒன்று. தற்போது ஆர்பிஐ கைவசம் உள்ள தங்கத்தில் 308 டன்னிற்கு நிகராக, ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. 514.1 டன் எடையிலான தங்கம், வங்கிகளின் கடனுக்கு நிகர்ப்படுத்தப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மத்திய வங்கிகளுக்கு, பாங்க் ஆப் இங்கிலாந்து பாரம்பரியமாக களஞ்சியமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கும், சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்தே இங்கிலாந்து தலைநகர் லண்டன், தங்கத்தை சேமித்து வைப்பதற்கான சிறந்த இடமாக தொடர்கிறது.

இந்தியா வந்த தங்கம்

இந்த நிலையில் இங்கிலாந்து வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. அந்த வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை நாட்டிலுள்ள தனது பெட்டகங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அந்த தங்கம், சிறப்பு விமானம் மூலம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்டு மும்பையின் மின்ட் சாலை மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் பழைய அலுவலக கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் செலவில் சிலவற்றை சேமிக்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

SRINIVASAN S.
ஜூன் 01, 2024 10:45

இது பொதுமக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் வாங்கப்பட்டது.கடந்த 10 ஆண்டுகளாக போடப்பட்ட வரி பணத்தில் ஆட்சி நடக்கிறது.


Bakavathi
ஜூன் 02, 2024 05:28

எந்த அரசும் வரி இல்லாமல் செயல்பட முடியாது . ஆனால் எவ்வளவு வரி என்பது தான் இங்கு முக்கியம். தமிழகத்தில் பெட்ரோல் 100+ . 95ரூபாய் கும் குறைவாக விற்கும் மாநிலங்களும் உள்ளது. தமிழகத்தில் ஒரு கேஸ் சிலிண்டர் 850₹. சில மாநிலங்களில் 800₹ மட்டுமே. இந்த வித்தியாசம் மாநிலத்தின் வரி. இப்போதாவது புரிகிறதா வரி எங்கு அதிகமாக உள்ளது என்று


M velmurugan
ஜூன் 01, 2024 04:59

very good


M velmurugan
ஜூன் 01, 2024 04:56

Good


venugopal s
மே 31, 2024 22:59

இதுவும் விற்பனைக்கு தானே ?


N Sasikumar Yadhav
மே 31, 2024 22:24

பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை ஊழல் இல்லாமல் கையாளும் நிதியமைச்சரின் சொந்த மாநிலம் தமிழகம் என்பதால் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளவேண்டும் . நிதியமைச்சராக இருந்த ப சிதம்பரத்தால் இருந்த தலைகுனிந்த நாம் இப்போதிருக்கும் நிதியமைச்சர் தமிழர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தலைநிமிர்ந்தோம்


Ramesh
ஜூன் 06, 2024 22:14

வாழ்க சீதாராம்... வளர்க பாரதம்


sankaranarayanan
மே 31, 2024 21:23

காங்கிரசு கட்சி ஆண்டபோது இங்கிலாந்தில் வங்கியில் நமது தங்கத்தை அடகுவைத்து இங்கே பணம் நோட்டுகளை அச்சடித்துவந்ததை மோடி பிரதமர் ஆனதும் அந்த தங்கத்தை நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தினால் மீட்டு நமது நாட்டிற்கே திரும்ப கொண்டுவரும் நிலை மாறியுள்ளது மக்களே தெரிந்து கொள்ளுங்கள் ஒருவர் நமது தங்கத்தை அயல்நாட்டில் அடகு வைகிறார் ஒருவர் அடகு வைத்த தங்கத்தை மீட்டு நமது நாட்டிற்கே கொண்டு வருகிறார்


a.s murthy
மே 31, 2024 19:38

திரு. மோடி அவர்கள் தன் சம்பளத்தின் கணக்கிலேயேதான் ஜான் வயிற்றுக்கும் உணவு அளிக்கிறார்


Ambika. K
மே 31, 2024 18:00

1991 இல் காங்கிரஸ் ஆட்சியில் செலவுக்கு காசு இல்லை என்று இந்தியா அடகு வைத்த தங்கம் இது.அதற்கு முன் இருந்த விபி சிங் செய்த செலவு. அதற்கு முன் 1980 லிருந்து அம்மையும் பிள்ளை யுமாக செய்த செலவும் இதில் அடக்கம். இப்பொழுது ரவுளும் இண்டி கூட்டணியும் இதை சூறையாட தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க துடிக்கிறார்கள்.


GMM
மே 31, 2024 17:22

சொற்ப விலை உள்ள பல கிலோ ஜீனி எறும்புகள், டன் கோணி கரையான், சில கிலோ கஞ்சா எலி சாப்பிடும் நாடு. புள்ளி கூட்டணி இருந்தால், 100 தங்கம் வெயிலில் உருகி, சாம்பல் ஆகி இருக்கும். சாம்பல் காற்றில் கரைந்து போயிருக்கும். RBI யின் தேச பற்று மிக்க செயல். மற்ற வெளிநாட்டு இருப்பை இந்தியா கொண்டுவர முடியும்.


J.V. Iyer
மே 31, 2024 16:17

அடடா.. இப்பபோய் ஆட்சியில் ஒரு அமைச்சராக இல்லாமல் போய்விட்டோமே என்று இண்டி கூட்டணி தலைவர்கள் அங்கலாய்ப்பு. எவ்வளவோ அடித்திருக்கலாமே என்று மாரிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு....


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ