ஆர்.டி. பாட்டீலுக்கு ஜாமின் மறுப்பு
கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி முதல் நிலை உதவியாளர் பணிகளுக்கு தேர்வு நடந்தது. கலபுரகியில் உள்ள ஒரு மையத்தில் புளூடூத் பயன்படுத்தி தேர்வு எழுதிய சிலர் பிடிபட்டனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அப்சல்பூரை சேர்ந்த, சமாஜ்வாதி கட்சி பிரமுகர் ஆர்.டி.பாட்டீல் முறைகேடு செய்து தேர்வு எழுதுவதற்கு பணம் வாங்கிக்கொண்டு உதவி செய்தது தெரிந்தது. இவ்வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.மஹாராஷ்டிராவில் தலைமுறைவாக இருந்த ஆர்.டி.பாட்டீல் கைது செய்யப்பட்டார். கலபுரகிமத்திய சிறையில்உள்ளார்.ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தின் கலபுரகி கிளையில் கடந்த ஆண்டு மனு செய்தார். அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி பி.ஆர்.கவாய் விசாரித்து, நேற்று அவரது மனுவை தள்ளுபடி செய்தார் -- -நமது நிருபர் - -.