உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்; பினராயி விஜயன் அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்; பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்; பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. உணவு, குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த கோரியும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களுக்கு இடையே மீட்புப் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டினாலும் நிலைமை இன்னமும் சீராகவில்லை. இந் நிலையில் புயலால் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.இது குறித்து அவர் தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது; பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்கள் மீது தான் எங்களின் முழு எண்ணங்கள் இருக்கின்றன. இதுபோன்ற சவாலான நேரத்தில் அண்டை மாநிலங்களுடன் கேரளா எப்போதும் ஒற்றுமையாக நிற்கிறது.தமிழகம் விரும்பும் எந்த உதவிகளையும் வழங்க கேரளா தயாராகவே உள்ளது. இரு மாநிலங்களும் இணைந்து பேரழிவில் இருந்து மீண்டு வருவோம்.இவ்வாறுஅந்த பதிவில் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
டிச 04, 2024 18:59

கேரளா தமிழகத்துக்கு இதயத்தில் இடம் கொடுத்துவிட்டது ..... நினைவிருக்கலாம், கூட்டணி அமைக்கும்போது எதிர்பார்த்த சீட் எண்ணிக்கை கிடைக்காத கட்சிகள் வருந்த வேண்டாம் ... அவர்களுக்கு இதயத்தில் இடம் கொடுத்துவிட்டேன் என்பார் கருணாநிதி ....


sankaranarayanan
டிச 04, 2024 17:33

தமிழகம் விரும்பும் எந்த உதவிகளையும் வழங்க கேரளா தயாராகவே உள்ளது என்று கூறிய கேரளா முதல்வருக்கு நன்றி என்ன மாதிரி உதவி என்றே சொல்லவில்லை முதலில் நீங்கள் உங்கள் மாநில சுகாதார கழிவுப்பொருட்களை எங்கள் மாநிலத்தில் கொட்டாதீர்கள் இரண்டாவது எங்கள் மாநில கனிம பொருட்களை சூரையாடாதீர்கள் இவைகளே போதும்


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 14:22

புயல், மழை, வெள்ளம் போன்ற சோக நிகழ்வில் அரசியல் எழுதும் ஆட்கள் மீது கோபமும், வெறுப்பும் வருகிறது. நான் அடுத்த 2 நாள் லீவு. பை பை


sankar
டிச 04, 2024 13:50

உனக்கே துணைக்கு ரெண்டுபேரு வேண்டி இருக்கு - இதுல நீ வேற அடுத்தவனுக்கு ?


Ramesh Sargam
டிச 04, 2024 13:39

எந்தவிதத்தில் துணை? துணை எல்லாம் வேண்டாம். முதலில் உங்கள் மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையில் கொட்டப்படும் கழிவுகளை உடனே தடுக்கவும். அதுவே நீங்கள் செய்யும் ஒரு பெரிய உதவி.


sugumar s
டிச 04, 2024 13:39

superb binarayi vijayan sir. please send 1000 crores to TN. out of that they may spend 100 and pocket 900


N Srinivasan
டிச 04, 2024 13:21

எங்க திராவிட மாடல் அரசு யாரிடமும் ஒன்றும் கேட்காது. மத்திய அரசிடம் மட்டும் தான் கேட்கும் அது எங்கள் உரிமை. NDRF உதவி கேட்காது, ராணுவத்தின் உதவியை கேட்காது நாங்கள் எல்லோரும் சுய மரியாதை உள்ளவர்கள்


புதிய வீடியோ