உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் சாட்டையை சுழற்றும் பாஜ: தேர்தலில் கட்சிக்கு துரோகம் செய்த நிர்வாகிகள் சஸ்பெண்ட்

பீஹாரில் சாட்டையை சுழற்றும் பாஜ: தேர்தலில் கட்சிக்கு துரோகம் செய்த நிர்வாகிகள் சஸ்பெண்ட்

புதுடில்லி: பீஹாரில் தேர்தல் நேரத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை கட்டம் கட்டும் பணியில் பாஜ இறங்கி உள்ளது. அதன் முதல் அத்தியாயமாக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பலரை சஸ்பெண்ட் செய்துள்ளது.பீஹார் சட்டசபை தேர்தலில் கிடைத்த வரலாற்று வெற்றியை பாஜவும், அதன் கூட்டணி கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர். தீவிர தேர்தல் பிரசாரம், வேட்பாளர்கள் தேர்வு என கட்சியின் வெற்றிக்கு பாடுபட்டவர்களை பாராட்டிய தலைமை, துரோகம் செய்த நிர்வாகிகளை அடையாளம் கண்டு அவர்களை கட்டம் கட்டி வருகிறது.அதன் முதல் முக்கிய நடவடிக்கையாக, முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் மூத்த நிர்வாகி மற்றும் இருமுறை எம்பியும் ஆன ஆர்.கே. சிங்கை பாஜ தலைமை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இவருடன் சட்டமேலவை உறுப்பினர் அசோக் அகர்வால், கதிஹார் மேயர் உஷா அகர்வால் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக, கட்சி தலைமை அவர்களுக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி இருக்கிறது. அதில் ஏன் உங்களை கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று கேட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் ஆர்.கே. சிங் அரா தொகுதியின் முன்னாள் எம்பி. குறிப்பாக, மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் உள்துறை செயலாளராக பணியாற்றியவர். முதல் முறை மோடி பிரதமரான போது அமைச்சராகவும் திறம்பட செயலாற்றியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை