உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொரோனா மருத்துவ உபகரணங்கள் முறைகேடு எடியூரப்பா, ஸ்ரீராமுலு மீது வழக்கு தொடர பரிந்துரை

கொரோனா மருத்துவ உபகரணங்கள் முறைகேடு எடியூரப்பா, ஸ்ரீராமுலு மீது வழக்கு தொடர பரிந்துரை

படம்: எடியூரப்பா, ஸ்ரீராமுலுபெங்களூரு: கொரோனா காலகட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதால், அப்போதைய முதல்வர் எடியூரப்பா, அமைச்சராக இருந்த ஸ்ரீராமுலு மீது விசாரணை நடத்துமாறு, ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையிலான கமிஷன், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, 2020ல் கொரோனா பரவல் துவங்கியது. இதை கட்டுப்படுத்த வெளிநாட்டில் இருந்த வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களில் முறைகேடு செய்ததாக, அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.கடந்த 2023ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, இந்த முறைகேட்டை கண்டறிய, ஓய்வுபெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் கமிஷன் அமைத்தது.*இடைக்கால அறிக்கைஇக்கமிஷன், நடப்பாண்டு ஆகஸ்டில், அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தது. அதன்பேரில், முறைகேடு தொடர்பாக விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது; விசாரணையை கண்காணிக்க, அமைச்சரவை துணை கமிட்டி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், 'கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வினியோகிக்க, உள்ளூர் கம்பெனிகள், ஒரு பி.பி.இ., கிட் 330.40 ரூபாய்க்கு வழங்குவதாக குறிப்பிட்டது. ஆனால், மாநில அரசோ, ஒரு பி.பி.இ., கிட் 2,117.53 ரூபாய்க்கு வழங்குவதாக தெரிவித்த, சீனாவின் டி.எச்.பி., குளோபர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தது.இதற்கு ஒப்புதல் அளித்த, அப்போதைய முதல்வர் எடியூரப்பா, அமைச்சராக இருந்த ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளார்.இதற்கு பதிலளித்து, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ''நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே, கொரோனா முறைகேடு குறித்து தெரிவித்திருந்தோம். ஆட்சிக்கு வந்தவுடன், இது தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கை மீது நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.என் மீது வழக்கு தொடர்வதால் எனக்கு எந்த பயமும் இல்லை. கொரோனாவின்போது, சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில காங்கிரஸ், முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்துடன் எடுத்த செயல். நான் எந்த தவறும் செய்யவில்லை. விசாரணையில் உண்மை வெளிவரும். காங்கிரஸ் அரசு, தேவையின்றி, பழைய கதையை தோண்டுகிறது.எடியூரப்பாமுன்னாள் முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை