உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் :

பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் :

புதுடில்லி: பாசுமதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.உள்நாட்டில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்து வதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் ,கடந்தாண்டு ஜூலை மாதம் பாசுமதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய தடை மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டதாகவும், இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவித்தது.இதன்படி புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஜம்புநாதன்
செப் 28, 2024 20:02

இந்தியாவின் ஏற்றுமதி இந்த காலாண்டில் குறைந்திருக்கிறது. அரிசி ஏற்றுமதியை உயர்த்தி சீராக்கலாம்னு திட்டம். உள்ளூரில் விலை ஏறினா இவிங்களுக்கு கவலை இல்லை. பாரத் அரிசி விக்குறோம்னு மூணு மாசம் கிலோ 29 ரூவாய்க்கு குடுத்திட்டு இப்போ இழுத்து மூடிட்டாங்க. வெளியில் கிலோ 60 ரூவாய்க்கு வாங்குறோம்.


Kasimani Baskaran
செப் 28, 2024 06:45

ஐந்து கிலோ பொன்னி அரிசி முன்னர் 7-8 டாலருக்கு கிடைத்தது. இப்பொழுதெல்லாம் குப்பை ரகம் கூட $11 க்கு மேல்தான். சிங்கப்பூருக்கு இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடையில்லை என்றாலும் கூட விலையை ஏற்றி இன்புற்றார்கள்.


புதிய வீடியோ