உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: கட்சிகளுடன் அமைச்சர் ஆலோசனை

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: கட்சிகளுடன் அமைச்சர் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அனைத்து கட்சிகளுடன் பேச வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகிக்கும் யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டில்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றினார். கடந்த மார்ச் 14ல், டில்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்ட போது, எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.சர்ச்சைஇது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'இந்த பணத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறினார்.இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். இந்த குழுவினர் நடத்திய விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணமானது.இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால் முரண்டு பிடித்தார்.அதிருப்தி அடைந்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, விசாரணை குழுவின் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தார். இதனையடுத்து யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், பார்லிமென்டின் மழை கால கூட்டத்தொடருக்கு முன்னாள் யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்யாவிட்டால், அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மனம் கொண்டு வரப்படும். நீதித்துறையின் ஒருமைப்பாட்டையும், நீதி அமைப்பு மீது மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுத்து உள்ளது. பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Santhakumar Srinivasalu
ஜூன் 04, 2025 13:22

இவ்வளவு பெரிய தவறுக்கு நீதித்துறைக்கு / நீதிமன்றத்திற்கு அவரை பதவி நீக்க அதிகாரம் இல்லையா?


அப்பாவி
ஜூன் 04, 2025 11:26

கர்மம் கர்மம் நீதித்துறை விசாரிக்க முடியாத கேஸ் போலிருக்கு.


SP
ஜூன் 04, 2025 10:36

ஊழல் செய்திருக்கிறார் என்று நன்றாக தெரிந்தும் ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியாத அளவில் தான் நம் சட்டம் இருக்கின்றது தேவை உடனடி சட்ட திருத்தம் தான்.


D Natarajan
ஜூன் 04, 2025 07:44

சாதாரண மனிதனாக இருந்தால் இந்நேரம் சிறை வாசம். ஆனால் நீதிபதியாக இருப்பதால் கைது இல்லை. இது என்ன சட்டம். இவனை கைது செய்து திஹார் சிறையில் அடைக்கவேண்டும் . சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்


Kasimani Baskaran
ஜூன் 04, 2025 03:54

கிரிமினல் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாத எம்பிக்களை வைத்து அதில் எதனை சதவிகிதத்தினர் வாக்களிக்கிறார் என்பதை வைத்து பதவி நீக்கம் செய்யலாம். உறுதி செய்யப்படாத காலிகள் வாக்களிப்பது சந்தேகத்துக்கு இடமுள்ள வன்மம் என்றுதான் சொல்லமுடியும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 04, 2025 01:51

வர்மாவுக்கு கொடுக்கிற பாடம் மற்ற சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளுக்கு ஒரு கிலியாக இருக்க வேண்டும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 03, 2025 23:47

இனிதான் நீதிமன்றங்களின் லீலைகள் வெளிவர போகின்றன....இவர் மீது நடவடிக்கை எடுத்தால் இவர் மற்ற நீதிபதிகளை போட்டு கொடுப்பார்....ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு விதித்த ஜே பி பார்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் போன்றவர்களுக்கும் வயிற்றை கலக்கும்.....அதுமட்டுமின்றி இந்திய அரசியல் சாசனத்தை விட உச்ச நீதிமன்றத்திற்கே வானளாவிய அதிகாரம் உள்ளது என்று இருமாப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்மட்டியடி.....இங்கு இருக்கும் திராவிடியா அரசு இனி பணம் கொடுத்து தீர்ப்பை விலைக்கு வாங்கும் வேலை நடக்காது.....இனி திமுக அமைச்சர்கள் கோபாலபுர மன்னர் குடும்பத்து அனைவரும் திகார் சிறையில் களி திங்க வேண்டும்....!!!


Anu Sekhar
ஜூன் 03, 2025 23:42

இந்த பணம் எங்கேருந்து வந்தது என்று விசாரித்து அவர்களையும் உள்ளே தள்ளுங்க. பதவி நீக்கம் போதாது ஜெயிக்கு அனுப்புங்கள்.


Vinothkumar
ஜூன் 03, 2025 23:39

What is ed doing now.. thank God justice devi is closing her eyes.. soon booma devi will do the justice


S Srinivasan
ஜூன் 03, 2025 23:12

what kind of judge he is, if there is morale in the judiciary where we can expect