உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 6.5% ஆக தொடர்கிறது

7வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 6.5% ஆக தொடர்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 7வது முறையாக மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாக நீடிக்கிறது.ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தில் தொடர்ந்து 7வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை. அது 6.5 சதவீதமாகவே நீடிப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் உயராது.ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்திற்கு பிறகு அந்த வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அது 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. டிசம்பர் மாதத்தில் 5.7 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம், ஜனவரி மற்றும் பிப்ரவரி என இரண்டு மாதத்திலும் 5.1 சதவீதமாகக் குறைந்துள்ளது, பணவீக்கத்தில் கவனம் செலுத்தி 4 சதவீதம் என்ற இலக்கை அடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Raj Kamal
ஏப் 05, 2024 12:50

தவறு, ஏற்றப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் ஏழாவது முறையாக குறைக்கப்படவில்லை என்பதே உண்மை


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ