உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நற்பெயர் பாதிப்பு!

நற்பெயர் பாதிப்பு!

இந்திய பாஸ்போர்ட்டின் உலக தரவரிசை சரிவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளே காரணம். இது, நம் நாட்டின் உலகளா விய நற்பெயரை பாதித்து உள்ளது. பாஸ்போர்ட் சேவையை மேம்படுத்துவதற்கு பதில், அவற்றை பெறுவது அதிக செலவுமிக்கதாக மத்திய அரசு மாற்றியுள்ளது. -மல்லிகார்ஜுன கார்கே, தேசிய தலைவர், காங்கிரஸ்

ஊழல் மனப்பான்மை!

குற்றவியல் வழக்கில், 30 நாட்கள் சிறையில் இருக்கும் அமைச்சர்களை பதவி நீக்க வழிவகை செய்யும் மசோதாவை காங்., எதிர்க்கிறது. இது, தங்களுக்கு எல்லாவற்றிற்கும் உரிமை உண்டு என்ற மனப்பான்மையின் வெளிப்பாடு. ஊழலில் ஈடுபடுவோரை பிடித்தால், அடக்குமுறை என்கின்றனர். - செஷாத் பூனாவாலா, தேசிய செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,

அதிகார போட்டி!

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், பக்தர்களின் மத நம்பிக்கையை பாதுகாப்பதை விட, பா.ஜ., தலைமைக்கு உட்கட்சிப் பூசலில் அதிக அக்கறை உள்ளது. இரட்டை இன்ஜின் அரசு இணைந்து செயல்படவில்லை; மாறாக, அவற்றுக்கு இடையே மோதல் நீடிப்பதால், அதிகாரப் போட்டி நிலவுகிறது. - அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை