உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு மருத்துவமனைகளுக்கு நேரடி பஸ்கள் இயக்க கோரிக்கை

மைசூரு மருத்துவமனைகளுக்கு நேரடி பஸ்கள் இயக்க கோரிக்கை

மைசூரு: மைசூரு உட்பட சுற்றுப்புற தாலுகா, அக்கம், பக்கத்து மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளின் வசதிக்காக, அரசு மருத்துவமனைகளுக்கு நேரடி பஸ் போக்குவரத்து துவக்கும்படி, வேண்டுகோள் வலுத்துள்ளது. மைசூரு உட்பட சுற்றுப்புற தாலுகா, அண்டை மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, மைசூரில் ஒரே சாலையில் எட்டு பெரிய மருத்துவமனைகள் இருப்பது, வரப்பிரசாதமாகும். ஆனால் இந்த மருத்துவமனைகளுக்கு செல்ல, நேரடி பஸ் சேவை இல்லாததால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.சாம்ராஜ் நகர், ஹனுாரின், அஜ்ஜிபுரா கிராமத்தை சேர்ந்தவர் சன்னப்பா, 60, இவர் சில நாட்களுக்கு முன், பரிசோதனை செய்து கொள்ள, மைசூரின் ஜெயதேவா மருத்துவமனைக்குவந்தார். மருத்துவமனைக்கு செல்ல நேரடி பஸ் கிடைக்காமல், இரண்டு இடங்களில் பஸ்கள் மாற வேண்டும் என்பதை அறிந்தார். இது கஷ்டமாக இருந்ததால், அதிக பணம் கொடுத்து, ஆட்டோவில் சென்றார். இவர் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான நோயாளிகள், இதே போன்று அவதிப்படுகின்றனர்.மைசூரின் ஒன்டிகொப்பலு கோவிலில் இருந்து, மேடகள்ளி வட்ட சாலை ஜங்ஷன் வரையிலான, கே.ஆர்.எஸ்., சாலையில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை, டிரவுமா கேர் மருத்துவமனை, (விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை) நெப்ரோ யூராலஜி மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பி.கே.டி.பி., மருத்துவமனை, அரசு இயற்கை சிகிச்சை மற்றும் யோகா மருத்துவமனை, ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றை தவிர இரண்டு தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மைசூரு ஊரக பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து தானப்பா சதுக்கம் வரை ஒரு பஸ்சில் செல்ல வேண்டும். இங்கிருந்து கே.ஆர்.எஸ்., சாலைக்கு செல்ல, வேறு ஒரு பஸ்சில் பயணிக்க வேண்டும். மாண்டியா, குடகு, சாம்ராஜ்நகர், ஹாசன் பகுதிகளில் இருந்தும், நோயாளிகள் சிகிச்சைக்காக மைசூருக்கு வருகின்றனர். இப்பாதையில் அரசு பஸ்களை விட, தனியார் பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. பயணியர் தனியார் பஸ்களையே நம்ப வேண்டியுள்ளது. எனவே, 'கே.ஆர்.எஸ்., சாலைக்கு நேரடி பஸ் போக்குவரத்து துவக்க வேண்டும்' என, நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை