மேலும் செய்திகள்
இ - சேவை மையத்தில் இயங்கும் அங்கன்வாடி
17-Nov-2024
பெலகாவி: “மாநிலத்தில் புதிதாக, 3,988 அங்கன்வாடிகள் திறக்க அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது,” என, மாநில மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.மேல்சபை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் ஜவராயகவுடா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:மாநிலத்தில் புதிதாக அங்கன்வாடிகள் திறக்க, மத்திய அரசின் அனுமதி அவசியம்.ஏன் என்றால் அங்கன்வாடிகளில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுக்கான நிதியுதவியில், மத்திய அரசின் பங்களிப்பு 20 சதவீதமாகும்.அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில், மத்திய அரசின் பங்களிப்பு 30 சதவீதமாகும்.மானிய விலையில் அரிசி, கோதுமையை அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசே வழங்குகிறது. தற்போது கர்நாடகாவில் மத்திய அரசின் நிதியுதவியில் இயங்கும் 65,931, மாநில அரசின் நிதியுதவியில் 3,988 அங்கன்வாடி மையங்கள் இயங்குகின்றன.மாநிலத்தில் புதிதாக 3988 அங்கன்வாடிகள் திறக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.சொந்த கட்டடம் இல்லாத, அங்கன்வாடிகளுக்கு புதிதாக கட்டடம் கட்டப்படுகிறது. 337 அங்கன்வாடி கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.
17-Nov-2024