உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., இருப்பதால்தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

பா.ஜ., இருப்பதால்தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹசாரிபாக்: '' பா.ஜ., இருப்பதால் தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கிறது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலம் ஹிசாரிபாக் நகரில் பா.ஜ., சார்பில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மாநிலத்தின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் மத்திய அரசு உழைக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சியை தடம் புரள செய்யும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு உள்ளது. ஆளும் ஜே.எம்.எம்., காங்கிரஸ், ஆர்.ஜே.டி., ஆகியன பெரிய தடையாக உள்ளனர். மாநிலத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே வளர்ச்சி ஏற்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mrm31gz6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 ஆட்சி பறிபோவதை அறிந்து காங்கிரசும் ஜே.எம்.எம்., கட்சியும் முழு அளவில் வேகமாக ஊழல் செய்ய துவங்கி உள்ளனர். கடந்த வாரங்களில் ஆயிரக்கணக்கில் பணியிட மாற்றம் நடந்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து உள்ளனர். மாநில அரசு ஊழலில் மூழ்கி உள்ளது. மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்ய அவர்கள் அஞ்சுவதில்லை. ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேசனிலும் அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.ஜார்க்கண்டில் தே.ஜ., ஆட்சி அமைந்ததும், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பா.ஜ., இருக்கும் வரை, இட ஒதுக்கீட்டை யாராலும் பறித்து விட முடியாது. பா.ஜ., இருப்பதால் தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கிறது.தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானதாக காங்கிரஸ் உள்ளது. அவர்கள் வளர்ச்சி பெற்று விடக்கூடாது என்ற கொள்கை அடிப்படையிலேயே அக்கட்சி ஆட்சி நடத்தியது. இதனால் தான் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அக்கட்சி, தற்போது அதனை முடிவுக்கு கொண்டு வருவோம் என பேசுகிறது. அவர்களின் இட ஒதுக்கீட்டை பறித்து தனது சிறப்பு ஓட்டு வங்கிக்கு அளிக்க அக்கட்சி நினைக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Lion Drsekar
அக் 04, 2024 07:29

எல்லாமே பாதுகாப்பாக இருக்கிறது, மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, மின்சார கொள்ளை, கொல்லைகளில் பல இருக்கிறது, ட்ரங்க் பெட்டியில் ஆவணங்கள் ஒப்படைப்பு, என் வயதுடைய மூத்த பத்திரிக்கையாளர் டெல்லியில் இருந்து அனுதினமும் டெல்லி லீக்ஸ் எத்தினை கைது, நடவடிக்கை செய்திகள் அதிகாரப்போர்வமாக இந்த மாதம் இந்த தேதியில் இன்னார் கைது எவ்வளவு செய்த்திகள் வந்தவண்ணம்


தாமரை மலர்கிறது
அக் 03, 2024 02:25

இடஒதுக்கீடு தேவை இல்லாத ஆணி.


venugopal s
அக் 02, 2024 22:31

இது தேர்தல் நேரம் என்பதால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், யாரும் உங்கள் பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்!


ஆரூர் ரங்
அக் 02, 2024 22:04

மண்டல் கமிஷனை அமைத்து பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தது வாஜ்பாயி அவர்களும் அத்வானி அவர்களும் முக்கிய இடம் பெற்றிருந்த மந்திரிசபை. ஆனால் அந்த மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டது பிறகு வந்த இந்திராகாந்தி ராஜிவ் காந்தி அரசுகள்தான். அந்த அறிக்கையின் படி இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து தீக்குளித்து இறந்தது . மாணவர் காங்கிரஸ் தலைவர்.SC OBC இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட ஏற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கும் 10 சதவீத EWS இட ஒதுக்கீட்டை அளித்தது பாஜகதான்.


Barakat Ali
அக் 02, 2024 21:20

சார்லஸ் டபிள்யூ எலியட் பல்கலைகழக பேராசிரியரும், ஹார்வர்டு பல்கலைகழகத்தின் தலைவருமான லாரி சம்மர்ஸ், பிரதமர் மோடியை வானளாவ புகழ்ந்துள்ளார் .... “பிரதமர் மோடி ஒரு ஆற்றல் மிக்கவராக, உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், புதிய முயற்சிகளை உருவாக்குவதிலும் சாதனை படைத்துள்ளார். பொருளாதாரத்தை மேம்படுத்தும் முன்முயற்சிகளுக்கு வலுவான மற்றும் பலதரப்பட்ட ஊக்கங்களை உறுதிப்படுத்தும் வகையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது ..... "


Sivakumar
அக் 02, 2024 20:46

இப்படி பிரதமரை பேசவைத்த பெருமை ஒருவரையே சாரும்.


Ramesh Sargam
அக் 02, 2024 19:28

பா.ஜ., இருப்பதால்தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கிறது. இல்லையென்றால் பதவி பொறுப்பு எல்லாம் அல்லக்கைகளுக்கும், வாரிசுகளுக்கும் செல்லும். உதாரணத்திற்கு தமிழ் நாடு. தமிழ் நாட்டில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே திமுக வில் கட்சி பணியாற்றியவர்களுக்கு ஒருத்தருக்காகவாவது முதல்வர், துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கிறதா, திமுக ஆட்சியில். இல்லை.


Thirumal s S
அக் 02, 2024 19:17

அண்ட புளுகு இதுதானா


raja
அக் 02, 2024 19:57

அட கொத்தடிமையே.... அப்துல்கலாம் அவர்களை ஜனாதிபதி ஆக்கி சமூக நீதியை காத்தது பிஜேபி....தாழ்த்தப்பட்ட பழங்குடி இனதவரான மூர்முவை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்க்கிறது பிஜேபி... தமிழகத்தில் ல் முருகன் அவர்களை பிஜேபி தலைவர் ஆக்கி பின் மத்திய அமைச்சர் ஆகியது பிஜேபி... உன் திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கோவால் புற கட்சி இதுபோல் செய்ததா வரலாறு இருக்கிறதா ... தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொது தொகுதி எதற்கு என்று கேட்டது கட்டுமரம் பிளாஸ்டிக் சேர் கொடுத்தது உன் திருட்டு தில்லு முல்லு கட்சி...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை