வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்பிடியே கொஞ்ச நாள் இழுத்துப் பறிச்சு கேசை இட்டுங்க. தானாகவே ரிடையராயி செட்டிலாயிடுவாரு. புத்தகம் எழுதி சம்பாரிப்பாரு.
புதுடில்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். கடந்த மார்ச் 14ல், டில்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்ட போது, பாதி எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'இந்த பணத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறினார்.இது குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணமானது.இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால் முரண்டு பிடித்தார். அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரைத்தது.நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக, பதவி நீக்க தீர்மானத்தை பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இது தொடர்பாக காங்., உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனையும் நடந்தது. அடுத்த மாதம் துவங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்நிலையில், பார்லி.,யால் பதவி நீக்கம் செய்யப்படுவதை தவிர்க்க, ராஜினாமாவை தவிர வேறு எந்த வாய்ப்பும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் இல்லை.இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்ய முடிவு செய்தால், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிக்குரிய ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளை பெறுவார். ஆனால், பார்லி.,யால் பதவி நீக்கம் செய்யப்பட்டால், அவருக்கு எந்த சலுகையும் கிடைக்காது. உயர் நீதிமன்ற நீதிபதி, தன் கையெழுத்துடன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பலாம். இதற்கு யார் ஒப்புலும் தேவையில்லை.பார்லி.,யால் பதவி நீக்கம் செய்யப்படுவதை தவிர்க்க, ராஜினாமா செய்வதே நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உள்ள ஒரேயொரு வாய்ப்பு. இதை அவர் பயன்படுத்தினால் நல்லது; இல்லை எனில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
இப்பிடியே கொஞ்ச நாள் இழுத்துப் பறிச்சு கேசை இட்டுங்க. தானாகவே ரிடையராயி செட்டிலாயிடுவாரு. புத்தகம் எழுதி சம்பாரிப்பாரு.