உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்

5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்தே மந்தமாக இருந்த ஆம் ஆத்மி, பஞ்சாபின் லுாதியானா மேற்கு, குஜராத்தின் விசாவதர் ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது. கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை காங்., வீழ்த்திய நிலையில், மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியை ஆளும் திரிணமுல் காங்., தக்க வைத்துள்ளது. ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய பா.ஜ., குஜராத்தில், ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.பஞ்சாபின் லுாதியானா மேற்கு; கேரளாவின் நிலம்பூர்; மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச்; குஜராத்தின் விசாவதர், காடி ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளில், கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இதில் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.நிலம்பூர் நிலம்பூர் தொகுதியில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஆர்யாதன் சவுகத், ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி வேட்பாளர் எம்.ஸ்வராஜை, 11,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்த தொகுதியில், சவுகத் தந்தை ஆர்யாதன் முகமது எட்டு முறை வெற்றி பெற்றுள்ளார். நிலம்பூர் இடைத்தேர்தல் பிரியங்கா பிரதிநிதித்துவப்படுத்தும் வயநாடு லோக்சபா தொகுதியின் ஒரு பகுதியாக இருப்பதால், அது ஒரு கவுரவப் போராகக் கருதப்பட்டது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு இந்த வெற்றி ஒரு பலமாக அமைந்துள்ளது. இடதுசாரிகளின் கோட்டையான நிலம்பூரை காங்., கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.லுாதியானா மேற்குஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக இருந்த குர்பிரீத் பாசி கோகி தற்கொலை செய்ததை அடுத்து, லுாதியானா மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி வேட்பாளரான ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யும், தொழிலதிபருமான சஞ்சீவ் அரோரா, 10,000 ஓட்டுகளுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரசின் பாரத் பூஷண் ஆஷு இரண்டாமிடம் பிடித்த நிலையில், பா.ஜ.,வின் ஜீவன் குப்தா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விசாவதர்பா.ஜ., ஆளும் குஜராத்தின் விசாவதர் தொகுதி இடைத்தேர்தலில், ஆம் ஆத்மி வேட்பாளர் கோபால் இத்தாலியா, பா.ஜ., வேட்பாளர் கிரித் படேலை தோற்கடித்துள்ளார். 75,942 ஓட்டுகளை பெற்ற கோபால் இத்தாலியா, கிரித் படேலை, 17,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். காடிகாடி எம்.எல்.ஏ.,வாக இருந்த பா.ஜ., நிர்வாகி கர்சன் சோங்கி மரணமடைந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராஜேந்திர சாவ்டா, மும்முனை போட்டி நிலவிய நிலையிலும், 39,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.காளிகஞ்ச் நாடியா மாவட்டத்தில் உள்ள காளிகஞ்ச் சட்டசபை தொகுதியில், ஆளும் திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்த நசிருதீன் அகமது, கடந்த பிப்ரவரியில் உயிரிழந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடந்தது. இதில், அவரது மகன் அலிபா அகமது, திரிணமுல் காங்., வேட்பாளராக களமிறங்கினார். அவர், 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காளிகஞ்ச் தேர்தல் வெற்றி ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

குண்டுவெடிப்பில் சிறுமி பலி

காளிகஞ்ச் தொகுதியில் ஆளும் திரிணமுல் காங்., வெற்றி பெற்றதை அடுத்து, அத்தொகுதிக்குட்பட்ட மொலாண்டி என்ற கிராமத்தில், திரிணமுல் காங்., - மார்க்சிஸ்ட் கம்யூ., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில், 13 வயது சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்தார். 'சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு இதுவே சாட்சி' என பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mario
ஜூன் 24, 2025 09:35

நிலம்பூர் தொகுதியில் பிஜேபி டெபாசிட் காலி, இதையும் ஒரு வரி சேர்த்துஇருக்கலாம். ஹா ஹா ஹா


பாமரன்
ஜூன் 24, 2025 08:59

நான் நேற்றே எழுதினேன்... கேரளாவில் வாடிகன்ஸ்... உபியில் முஸ்லீம்கள்... பஞ்சாபில் காலிஸ்தானிகள் மேற்கு வங்கத்தில் ரோஹிங்கியாக்கள் மற்றும் குசராத்து மாநிலத்தின் விசாவதாரில் ஆமதாபாத் விமான விபத்தும் ஜெயித்துள்ளது... பாஜக தோற்கலை..


பேசும் தமிழன்
ஜூன் 24, 2025 07:48

கான் கிராஸ் கட்சிக்கு முட்டு கொடுக்கும் கம்யுனிஸ்ட் இல்லாமல் போனால்... கான் கிராஸ் கட்சியும் இல்லாமல் போய் விடும்... நாடும் நன்றாக இருக்கும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 24, 2025 07:42

கேரளாவில் நடந்த இடைத்தேர்தலில் இண்டி கூட்டணி ஜெயிச்சுதா இல்லையா அப்படீன்னு ஒரு பத்திரிக்கையும் தெளிவா சொல்லவே இல்லையே


sridhar
ஜூன் 24, 2025 07:23

மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இடைதேர்தலில் வெல்ல முடிகிறது, ஆனால் இங்கே?


nagendhiran
ஜூன் 24, 2025 05:59

கேட்டா இந்தி கூட்டணி சொல்லுவானுங்க? அனால் தனி தனியா நிற்பானுங்க?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை