மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
6 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
6 hour(s) ago
சிலிகுரி : லோக்சபா தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்ட பாரத் ஒற்றுமை யாத்திரையை கடந்த 14ல், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் துவக்கினார்.பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை, கடந்த 23ல் அசாமின் குவஹாத்தி நகரில் நுழைய போலீசார் அனுமதி மறுத்ததை அடுத்து, யாத்திரையில் பங்கேற்ற காங்கிரசார் தடையை மீறி நகருக்குள் நுழைய முயன்றனர்.அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அசாமின் பிறபகுதி வழியாக கடந்த 25ம் தேதி, மேற்கு வங்கம் சென்ற ராகுல், யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி புதுடில்லி திரும்பினார்.இந்நிலையில், இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் நேற்று மீண்டும் துவங்கினார். முன்னதாக, சிலிகுரியில் உள்ள பாக்தோக்ரா விமான நிலையம் வந்த ராகுல், பின் சாலை மார்க்கமாக காரில் பயணித்தார். காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் இருபுறமும் நின்ற மக்களை பார்த்து கையசைத்தபடி அவர் சென்றார்.
1 hour(s) ago | 4
6 hour(s) ago
6 hour(s) ago