உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு பதிலடி; இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?

பாகிஸ்தானுக்கு பதிலடி; இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்தியா பதில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எத்தகைய வழிகளில் பாகிஸ்தானை தண்டிக்க முடியும் என மத்திய அரசு ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6u69gxfp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏப். 2016ம் ஆண்டு செப்., 18ம் தேதி அதிகாலை, ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதிக்குள் ஊடுருவிய நான்கு பயங்கரவாதிகள், நம் ராணுவ தலைமையகம் மீது மூன்று நிமிடங்களில், 17 கையெறி குண்டுகளை சரமாரியாக வீசினர். இதில், 17 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஆறு மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில், பயங்கரவாதிகள் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 11 நாட்கள் காத்திருந்த நம் ராணுவம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கர வாதிகளின் இருப்பிடத்தில் நடத்திய அதிரடி தாக்குதலில், 15 பாக்., பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு, பிப்., 14ல், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், நம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வந்த கான்வாய் மீது பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், நம் வீரர்கள், 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக, பிப்., 26ல், பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் பறந்து சென்ற நம் 12 போர் விமானங்கள், ஜெய்ஷ்-இ -முக மது பயங்கரவாதிகளின் பயிற்சி இந்த இரு சம்பவங்களிலுமே, நம் ராணுவத்தினரை குறிவைத்துதான் பயங்கரவாத தாக்குதல் நடந்தன. இந்த முறை, அப்பாவி சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டு இருப்பது நம் ராணுவத்துக்கு மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த முறை நம் பதிலடி மிகக் கடுமையானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகம் மற்றும் அதன் முக்கிய தலைவர்களை குறிவைத்து அழிக்கவும் பேச்சு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, பாக்.,கின் பஹவல்பூரில் உள்ள லஷ்கர் தலைமைய கத்தை தகர்க்க முதலில் திட்டமிட்ட தாகவும், அது பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என் பதால், அத்திட்டம் கைவிடப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாத ஏவுதளங்கள், பயிற்சி தளங்கள் மற்றும் எல்லை யில் இருந்து செயல்படும் தலைமையை குறிவைத்து நம் முப்படைகள் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Guna Gkrv
ஏப் 25, 2025 15:08

இந்த நியூஸ் எல்லாம் பத்திரிக்கைக்கு கொடுத்து எழுதச்சொன்ன எதிரி உசரகமாட்டானா ?


S.L.Narasimman
ஏப் 25, 2025 13:28

100 தீவிரவாதிகளை அழிக்கும் போது 10 பொதுமக்கள் பாதிக்கபடுவர். பின் என்ன இதுக்கு அந்த பயங்கரவாத கும்பல் முகாமை அவர்கள் இடத்தில் அமைக்க அந்த பொதுமக்கள்அனூமதித்துள்ளார்கள்.ராணுவம் கடும்தாக்குதலை நடத்த வேண்டும்.


Muralidharan S
ஏப் 25, 2025 12:25

அவன் பொதுமக்களுக்கு மத்தியில் அவனுடைய தலைமையகத்தை வைத்து இருப்பது அவனது தந்திரம். யாரும் பாதிக்கப்படாமல் யுத்தம் செய்யமுடியாது. முதலில் பாகிஸ்தான் முழுவதும் தீவிரவாதிகள் நிறைந்த நாடுதான். பாகிஸ்தானிடம் பாவ புண்ணியம் பார்த்துக்கொண்டு இருந்தால், நாம் தொடர்ந்து செத்துக்கொண்டு தான் இருக்கவேண்டும்.. பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு சுதந்திரம் கிடைத்த முதல் 15 நாட்களில், நாட்டில் நடந்த கோரசம்பவங்களை படித்து பார்த்தால், ரத்தம் கொதிக்கும். பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் ஹிந்துக்களை கொன்று குவித்தனர். ஹிந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர்.. ஹிந்துக்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அகதிகளாக வந்தனர்.. பாகிஸ்தான் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எல்லாம் இரக்கம் காட்டிக்கொண்டு இருக்கக்கூடாது. அந்த நாடே தீவிரவாதிகள் நாடுதான்.. நமது நோக்கம் பாகிஸ்தானை முற்றிலும் உலக வரைபடத்தில் இருந்து அழிப்பதாகத்தான் இருக்கவேண்டும்..


seshadri
ஏப் 25, 2025 11:54

பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த பகுதியை மீட்க இதுவே மிக சரியான தருணம். எல்லா நாடுகளும் நமக்கு ஆதரவாக உள்ளன. இதை விட்டால் வேறு நல்ல தருணம் கிடைக்காது. பார்க்கலாம் என்ன செய்ய போகிறது நமது அரசு என்று.


GS
ஏப் 25, 2025 09:00

if we see insight, they killed two of our army people, may be it was a pre-planned to kill our army people. Need very deep investigation also need to arrest people who are supporting Pakistan. Whomever he is political leader or celebrity


Velan Iyengaar
ஏப் 25, 2025 08:31

பத்திரிகையில் எழுதும் அளவுக்கு தான் நமது திட்டங்களின் ரகசியம் பாதுகாக்கப்படுகிறதா? அப்போ இந்த திட்டங்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்று யூகிக்கமுடிகிறதா மக்களே ???


Ramanujadasan
ஏப் 25, 2025 09:12

இது ஒரு எரநூறு ரூபாய் கூலிப்படையின் கேவலமான கருத்து . திராவிட மாடல் கூலிப்படையின் அறிவு எந்த மட்டமான அளவு இருக்கும் எனபதை எடுத்து காட்டுகிறது. பத்திரிகைகளில் நமது திடங்களை பகிரும் அளவு நமது ராணுவமோ அல்லது மோடி அரசோ, திராவிட மாடல் அரசு போல அறிவில்லாத அரசு கிடையாது


Barakat Ali
ஏப் 25, 2025 10:36

மீடியாக்களுக்கு ஒரு விதமான தகவல் கொடுத்துவிட்டு, திட்டத்தை மாற்றிக்கொள்ளவும், வெளியில் பகிரப்படாத புதிய திட்டத்தை நிறைவேற்றவும் வாய்ப்பு ..... தீவிரவாதிகளால் சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதே கூட எதிர்பாராத, கொரில்லா தாக்குதல்தானே ????


நாம் நாடு நம் மக்கள்
ஏப் 25, 2025 11:04

பாகிஸ்தான் மேல் திடீர் பாசம். முதலில் அங்கு நாடு கடத்த வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 25, 2025 11:27

திமுக, காங்கிரஸ், திரிணாமூல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிமைகளும் தேசவிரோதிகளாக இருப்பது இயல்பு ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 25, 2025 14:05

காசுக்கு ஏத்த பனியாரம் போல் வாங்கும் கூலிக்கு ஏற்ப கருத்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை