ரிக் ஷா டிரைவர் மீது துப்பாக்கிச்சூடு
புதுடில்லி: மின்சார ரிக் ஷா டிரைவரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் தேடுகின்றனர். வடக்கு டில்லி ஷாபாத் டெய்ரியில் வசிப்பவர் ராஜேஷ் பஸ்வான். மின்சார ரிக் ஷா டிரைவர். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவசர மருத்துவ சட்டப்படி அவரை அனுமதித்த டாக்டர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ராஜேஷ் பஸ்வானிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, ஆயுத சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை சுட்டவரை தேடி வருகின்றனர்.