உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.ஐ., உருவாக்கிய பதிவால் கலவரம்: குஜராத்தில் 50 பேர் அதிரடி கைது

ஏ.ஐ., உருவாக்கிய பதிவால் கலவரம்: குஜராத்தில் 50 பேர் அதிரடி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வதோதரா: குஜராத்தில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பதிவால், ஹிந்து - முஸ்லிம் சமூகத்தினரிடையே மோதல் வெடித்தது. இது தொடர்பாக, 50 பேர் கைது செய்யப்பட்டனர். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர பாய் படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வதோதரா மாவட்டத்தில் உள்ள ஜூனிகர்ஹி என்ற பகுதியில் வசிக்கும் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதில், முஸ்லிம்களின் மத வழிபாட்டு தலமான மசூதி பற்றிய தகவல்கள் இருந்தன. இது ஆட்சேபனைக்குரிய வகையில் இருப்பதாகக் கூறி, ஜூனிகர்ஹி பகுதியில் முஸ்லிம்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து, ஹிந்துக்களும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தினர். இது தொடர்பாக, 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், ஜூனிகர்ஹி பகுதியில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 23, 2025 00:37

புல்டோசர் வைத்து வீட்டை இடிப்பது எந்த சட்டத்தில் உள்ளது?


சிந்தனை
செப் 21, 2025 16:30

பாகிஸ்தான் பங்களாதேஷ் எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்த பிறகும் இங்கு இன்னமும் யாருக்கோ பயந்து கொண்டு வாழ வேண்டும் என்றால் இந்த நாட்டின் சட்டத்தின் தன்மை என்ன என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.


Sivasankaran Kannan
செப் 21, 2025 16:17

அவர்கள் வேணுகோபால் போன்ற திராவிட அடிமைகள் இல்ல போல..


V Venkatachalam
செப் 21, 2025 13:04

இதுவே சிறந்த உதாரணம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2025 07:51

அந்த ஹிந்து இளைஞன்தான் முதற் காரணம் என்றால் அவன் செய்தது தவறே.. இன்னொன்றையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.. ஒரு மேற்குவங்க / தெலங்கானா / ஆந்திர / கேரள / தமிழக ஹிந்து இளைஞன் அப்படிச் செய்திருந்தால் மத அடிப்படைவாதிகள் கொடுக்கும் பதிலடியில் ஹிந்துக்கள் இம்மாநிலங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக, கூட்டங்கூட்டமாக காலி செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்... வேறுபாடு புரிகிறதா >>>>


Kanns
செப் 21, 2025 07:51

Throw them into AfPakBangla Created for them by AntiIndia Traitors-Congress GandiNeru& ForeignBritish


திகழும் ஓவியம், Ajax Ontario
செப் 21, 2025 07:48

இங்கே கோவில்களை பற்றி குருமா கேவலமாக பேசினாலும், எ‌ன்ன சொன்னாலும், சனாதன தர்மம் டெங்கு கொசு என்று சொன்னாலும் நம்மவர்கள் கொஞ்சம் கூட சூடு சுரணை இல்லாத ஜடம்...அங்கே ஒரு ஏ ஐ பதிவிற்கு இவ்ளோ எதிர்ப்பு...


Venugopal S
செப் 21, 2025 07:44

குஜராத்திகளின் அறிவுத்திறனுக்கு இது ஒரு சரியான உதாரணம்!


s sambath kumar
செப் 21, 2025 07:30

உங்க ஆளுகளோட லட்க்ஷணம் தான் உலகம் பூரா தெரியுதே


அப்பாவி
செப் 21, 2025 06:40

டிஜிட்டல் புரட்சி ஹை... ரொம்ப வேகமா வளர்ந்து வல்லரசாயிட்டு வர்ரோம் ஹை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை