உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனேயில் இடிந்து விழுந்தது ஆற்றுப்பாலம்: நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

புனேயில் இடிந்து விழுந்தது ஆற்றுப்பாலம்: நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: பலத்த மழை மற்றும் நீர் மட்டம் உயர்வால் புனேயில் உள்ள இந்திராயானி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் மீட்கப்பட்டவர்களின் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் தலேகானில் உள்ள குண்ட்மாலா அருகே இந்திராயானி ஆற்றின் மீது நீண்ட நாட்களுக்கு முன்னர் கட்டப்பட்ட பாலம் உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் இங்கு வருவது வழக்கம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e5ltqb10&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று ஏராளமானோர் வந்த நிலையில், அந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேர ்நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.சம்பவம் குறித்து அறிந்ததும், போலீசார், மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 15 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன.இது குறித்து போலீசார் கூறியதாவது: இந்த சம்பவத்தில் சுமார் 15 முதல் 20 பேர் வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாழடைந்த நிலையில் இருந்த பாலம், சிறிது நேரம் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது. இருப்பினும், பலத்த மழை மற்றும் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் காண பலர், இந்த ஆற்றுப்பாலத்தில் ஒரே நேரத்தில் கூடியதால் பாலம் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் புனேவில் உள்ள இடத்தை அடைந்துள்ளன, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் குழுக்கள் வருவதற்கு முன்பே, உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரும் முதலில் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இதுவரை இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.

பிரதமர் கேட்டறிந்தார்

சைப்ரசில் உள்ள பிரதமர் மோடி, இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டி:மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள தலேகாவ் அருகே இந்திராயானி ஆற்றில் பாலம் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும்.இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜூன் 16, 2025 05:42

வளர்ச்சியோ வளர்ச்சி. பாலம் அடிச்சிக்க்ட்டுப் போறதிலே தமிழகத்துடன் போட்டி போடறாங்க.


Ramesh Sargam
ஜூன் 15, 2025 20:45

இதுபோன்ற இரும்பினால் அந்த காலத்தில் கட்டப்பட்ட பாலங்களை அரசே இடித்து விட்டு, புதியதாக, மிகவும் வலுவான பாலங்களை அரசு கட்டிக்கொடுத்து மக்களை காப்பாற்றவேண்டும்.


Narayanan Muthu
ஜூன் 15, 2025 20:19

நாளொரு விபத்து பொழுதொரு மரணம். அரசுகள் விழித்தெழுவது எப்போது.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 15, 2025 19:10

செத்தவங்களுக்கு 10 லட்சம். முறைகேட்டுக்கு சமாதி


V Venkatachalam
ஜூன் 15, 2025 21:37

சபாஷ் அண்ணே. என்ன இப்புடி கட்டுமரம் பத்தி அப்பட்டமா சொல்லிப்புட்டீயளே.. க.உ.பி ஆனாலும் மனசு உறுத்தும் போல..


ஆரூர் ரங்
ஜூன் 15, 2025 21:58

10 லட்சம் வேற தண்ணிக்கு. விடியல் நாட்டுல மட்டும் ஸ்பெசல் ஆஃபர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை