உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்; பீஹாரில் அமித்ஷா பிரசாரம்

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்; பீஹாரில் அமித்ஷா பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீஹார் தேர்தலில் துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வரும் 6ல், முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. முதற்கட்டமாக நடைபெறும் 121 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. இந்நிலையில் இன்று தர்பனில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவியின் 15 ஆண்டு கால ஆட்சியின் போது, பீஹாரை பேரழிவிற்கு உட்படுத்திய காட்டாட்சி ராஜ்யத்தை தடுக்க தாமரை சின்னம் இருக்கும் பட்டனை மக்கள் அனைவரும் அழுத்த வேண்டும்.3.60 கோடி மக்கள் ரூ.5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீட்டைப் பெறுகிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தர்பங்காவில் ஐடி பூங்கா அமைக்கப்படும். சாத் பண்டிகையை அவமதித்தவர்களை பீஹார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீஹார் தேர்தலில் துடைத்தெறியப்படும்.ராகுல் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஊடுருவல்காரர்களை ஆதரிக்கின்றனர். நாங்கள் ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளையும் விரட்டுவோம். நீங்கள் அனைவரும் நவம்பர் 06ம் தேதி தாமரை சின்னம் இருக்கும் பட்டனை அழுத்தி, எங்கள் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். காட்டாட்சி ராஜ்ஜியத்தை துடைத்தெறிய தேஜ கூட்டணிக்கு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்யத்தை மீண்டும் மாறுவேடத்தில் கொண்டுவர முயற்சி நடக்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
நவ 05, 2025 01:29

லாலு கட்சியும் காங்கிரெஸ்ம் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது. டெபாசிட் கிடைப்பது கூட சந்தேகம் தான்.


பேசும் தமிழன்
நவ 04, 2025 21:06

தேசவிரோத...ஊழல் கூட்டணி தேர்தலில் விரட்டி அடிக்கப்படுவது நாட்டுக்கு நல்லது தான் ......அவர்கள் கரையான்கள் போல நாட்டின் உள்ளே இருந்து கொண்டே ....அரித்து கொண்டு இருப்பவர்கள் .


Gokul Krishnan
நவ 04, 2025 19:18

இது வரை நடந்த பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன சாதனை செய்தோம் திட்டங்கள் கொண்டு வந்தோம் அதனால் என்ன பலன் என்று குறித்து அமித் ஷாவோ பிரதமரோ கூறியது இல்லை


vivek
நவ 04, 2025 22:51

கோகுல ....கூட்டத்தை பார்து உலரதே


Narayanan Muthu
நவ 04, 2025 18:05

ஞானேஷ்குமார் இருக்கும் வரை இவர் இப்படித்தான் பேசுவார். மக்கள் இவர்களை எப்போதோ நிராகரித்து விட்டார்கள். ஒன்றியத்திலும் ஒரு சில மாநிலங்களிலும் திருடப்பட்ட வெற்றியின் மமதையில் கொக்கரிக்கிறார்.


vadivelu
நவ 04, 2025 18:32

அப்படியா , அப்ப 2039 வரை இவர் படிதான் பேசுவார் என்கிறீர்கள்.


vadivelu
நவ 04, 2025 18:33

இந்த ஒரு கருத்துக்கே உங்களை ஞானேஷ்குமார் அவமதிப்பு குற்றம் சுமத்தி கேஸ் போடலாம்.


Indian
நவ 04, 2025 15:45

துடைப்பு எல்லாம் வட நாட்டுல தான் . தென்னாட்டுல முடியாது


V Venkatachalam, Chennai-87
நவ 04, 2025 17:55

தென்னாட்டை பத்தி அவரு பேசலியே. க.உ.பி ஏன் அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்லுது. அமீத் ஷான்னா பயம் இருக்குதானே. அந்த பயம் இருக்கட்டும்.


பேசும் தமிழன்
நவ 04, 2025 21:09

தெற்கும் புட்டு கொண்டு விடும் போல் தெரிகிறது......அந்த பயம் தான் உங்கள் கருத்தில் தெரிகிறது.


Nathansamwi
நவ 04, 2025 14:36

அப்போ கூட நாங்க ஜெயிச்சா நல்லது பண்ணுவோம் னு சொல்ல தோண மாட்டிங்குது ...எவ்ளோ நாளைக்கு தான் அடுத்தவனை குறை சொல்லியே ஓட்டு கேப்பீங்களோ


V Venkatachalam, Chennai-87
நவ 04, 2025 18:05

முகஸ் என்னா சொல்லுது. கல்யாண வூட்டில் இருந்து கட்சி மீட்டிங் வரைக்கும் வினாடிக்கு வினாடி எடப்பாடிய பத்தி தானே பேசுது. மேலும் து.மு எதை பத்தி பேசுது? அதுவும் எடப்பாடிய பத்தி தானே பேசுது. முகஸ் பவிசும் து.மு. பவிசும் பல்லை இளிக்குதே.. எடப்பாடிய பாத்து எதுக்கு இப்புடி பயந்து சாகணும்? ஊத்தி மூடிக்கும் ன்னு தெரிஞ்சு போச்சு.. அதுனால க.உ.பீஸ் அடக்கி வாசிக்கணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை