உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஜஸ்வி யாதவிடம் இரண்டு வாக்காளர் அட்டை உள்ளதா: பாஜ எழுப்பிய சந்தேகம்

தேஜஸ்வி யாதவிடம் இரண்டு வாக்காளர் அட்டை உள்ளதா: பாஜ எழுப்பிய சந்தேகம்

புதுடில்லி: தேஜஸ்வி யாதவிடம் இரு வாக்காளர் அட்டைகள் உள்ளதா என்று பாஜ சந்தேகம் எழுப்பி உள்ளது.பீஹார் வரைவு வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் குறித்து எதிர்க்கட்சிகள் ஏராளமான சந்தேகங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது.ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை, நான் எப்படி போட்டியிடுவது என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார். ஆனால் தேஜஸ்வியின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் 204-வது ஓட்டுப்பதிவு மையத்தில் 416வது வரிசை எண்ணில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது என்று கூறியது. முன்பு 171வது மையத்தில் 481வது வரிசை எண்ணில் தேஜஸ்வி பெயர் இடம்பெற்றிருந்தது என்றும் விளக்கியது. இந் நிலையில், தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டுகளை பாஜ மறுத்துள்ளது. மேலும், அவர் இரண்டு வாக்காளர் அட்டைகளை வைத்துள்ளரா என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து புதுடில்லியில் பாஜ எம்பி சம்பித் பத்ரா நிருபர்களிடம் கூறியதாவது;அவரின் (தேஜஸ்வி யாதவ்) குற்றச்சாட்டு மூலம் அவருக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டை உள்ளதாக அர்த்தப்படுகிறது. அப்படியானால் அவரிடம் புகைப்படத்துடன் கூடிய இரண்டு வாக்காளர் அட்டை இருந்ததா? காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும், தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சொல்லும் வண்ணம் இதை கூறுகின்றனர். தேர்தல் ஆணையமும், பாட்னா கலெக்டரும் வாக்காளர் பட்டியலில் பெயரைக் காட்டி இந்த விஷயத்தை தெளிவுபடுத்தி உள்ளனர் என்றார்.இதனிடையே வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லை என்ற குற்றச்சாட்டு கூறிய தேஜஸ்வி யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ