உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணி: வீடியோ வெளியிட்டார் ரயில்வே அமைச்சர்

புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணி: வீடியோ வெளியிட்டார் ரயில்வே அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புல்லட் ரயிலுக்கான இந்தியாவின் முதல் ‛ பேலஸ்ட்லெஸ் டிராக்' என்ற புது வகையான ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருவது குறித்த வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டு உள்ளார்.இந்தியாவில் 2026 முதல் புல்லட் ரயில் இயக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை முதல் குஜராத்தின் ஆமதாபாத் வரையிலான வழித்தடத்தில், 508 கி.மீ., தூரத்திற்கு முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த புல்லட் ரயிலுக்காக ‛ பேலஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம்' என்ற புது வகையான ரயில்ப் பாதை முதல்முறையாக உருவாக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=593etv6c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், புல்லட் ரயிலுக்கான இந்தியாவின் முதல் ‛பேலஸ்ட்லெஸ் டிராக்' குறித்த வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். அத்துடன் ரயில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் பயணிக்கும், 153 கி.மீ., தூரம் பாதை அமைக்கும் பணிகளும்,295.5 கி.மீ., தூரத்திற்கு பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தில் இன்னும் நிறைய வர உள்ளன எனக்கூறியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Azar Mufeen
மார் 30, 2024 04:01

1கி. மீ சாலை அமைக்க 23கோடி செலவு .சி .ஏ .ஜி அறிக்கை. என்ன ஏதோ நியாபகம் வருதே?


தமிழ்வேள்
மார் 29, 2024 20:44

டுமீல் இன தலைவர் ஞாபகத்தில் வருகிறார்


Lion Drsekar
மார் 29, 2024 16:48

பாராட்டுக்கள் இங்கு லஞ்சம் இல்லை, ஆகவே கண்டிப்பாக எல்லா பணமும் இந்த பயன்பாட்டுக்கு செலவுசெய்யப்படும் என்பது பாராட்டப்படவேண்டியது இதே எங்கள் குறுநில மன்னர்களாக இருந்தால் ? பலர் கூறியது , கூறுவது நினைவுக்கு வருகிறது ஒரு குறுநில மன்னர் வெளிநாட்டுக்குச் சென்றபோது அந்த நாட்டின் ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் வரவேற்பு கொடுத்த மாளிகை மிகப்பெரியதாக இருந்ததாம் அதைக்கண்ட இந்த குறுநில மன்னர் இது உங்கள் சொந்த கட்டிடமா அல்லது அரசு பங்களாவா என்று கேட்க அதற்க்கு அவர் கூறியது அதோ தெரிகிறதே ஒரு மேம்பாலம் அதைக் கட்டுவதற்கு நான் பெட்ரா கமிஷனில் கட்டிய சொந்த வீடு என்றாராம் அடுத்த சில ஆண்டுகளில் அந்த நாட்டு தலைவர் இந்த குறுநில மன்னர் அழைப்பின் பேரில் அவரது நாட்டுக்கு செல்ல, வரவேற்க ஒரு பங்காளவில் ஏற்பாடு செய்தா ர் இந்த குறுநில மன்னர் அந்த நாட்டு தலைவர் அதே கேள்வியைக் கேட்டிருக்கிறார் இது உங்கள் சொந்த வீடா அரசு வீடா என்று , அதற்க்கு குறுநில மன்னர் கூறியது அதோ தெரிகிறதே ஒரு மேம்பாலம், என்று கூற வந்த விருந்தினர் சுற்றி முற்றி பார்த்து எங்குமே ஒரு மேம்பாலத்தையுமே காணுமே என்று கூற, வாழ்க வளமுடன், வந்தே மாதரம்


M.LAKSHMANAN
மார் 29, 2024 17:03

excellent message sir


Raghavan
மார் 29, 2024 17:22

மேம்பாலம் கட்டி இடிந்து விட்டது ஆனால் எனக்கு என்று கட்டிக்கொண்ட இந்த வீடு ரொம்பவே ஸ்ட்ராங்க் நீங்க ஒண்ணும் பயந்துவிடாதீங்க என்றாராம்


Shekar Prakash
மார் 29, 2024 19:08

அந்த குறுநில மன்னர் நம்ம முதல்வர் தானே!


தமிழ்வேள்
மார் 29, 2024 20:33

அண்ணன் கட்சிக்கு ஓ போடுங்கோ ஞாபகம் வருதே


karthikeyan.p
மார் 29, 2024 16:10

good


மேலும் செய்திகள்