கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட ரவுடிகள் கைது
புதுடில்லி:கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஜவார் முகாமை சேர்ந்த ஆஷிஷ், 26, சுமித்,24, குணால்,25, ஆகிய மூவரும் உள்ளூர் இளைஞர்களை இணைத்து நரைனா மற்றும் கீர்த்தி நகரில் ரவுடிக் கும்பலை உருவாக்க முயன்றனர். கொள்ளை, வழிப்பறி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட குற்றங்களைச் செய்து வந்தனர். இவர்களுடன் இருந்த ரஞ்சித், மற்றொரு ரவுடியான விகாஸூடன் செப்டம்பர் மாதம் இணைந்தார். இதனால், ஆத்திரம் அடைந்த மூவரும், செப்டம்பரில் ரஞ்சித் வீட்டுக்குச் சென்று சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், ரஞ்சித் உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், மூவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், ஆஷிஷ், சுமித் மற்றும் குணால் ஆகிய மூவரும் ரிங் ரோடு அருகே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சகோதரர்களான ஆஷிஷ் மற்றும் சுமித் ஆகிய இருவரும் டிரைவராக பணிபுரிந்தனர். குணால் கல்லூரியில் படித்து வருகிறார். மூவரிடமும் விசாரணை நடக்கிறது.